எப்படி இருந்த நகுல், இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்க.ப்பபா.
'அட்அட்றா நாக்க முக்கா நாக்க முக்கா' என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதோடு தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடி உள்ளார். நடிகர் நகுல் அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் தெரிந்தது தான். நகுல் அவர்கள் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், எரியும் கண்ணாடி போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
https://www.instagram.com/p/B9y_y8fl44G/
நகுல் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், பின்னணி பாடகரும் ஆவார். இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக விக்ரம் நடிப்பில் வந்த அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடியது. இதனை தொடர்ந்து கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களுக்கு பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.
பின்னர் நடிகர் நகுல் அவர்கள் தனது நீண்ட நாள் காதலி சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவருக்கு பெரிதாக சினிமாவில் பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது நகுல் அவர்கள் சின்னத்திரை நோக்கியும் பயணம் செய்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக நகல் பங்கு பெற்று வருகிறார்.
https://www.instagram.com/p/B9t-hM9lIIg/
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார். இந்நிலையில் நடிகர் நகுல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் அடிக்கடி எதாவது ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் நடிகர் நகுல் அவர்கள் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதை பார்த்தால் இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற டயலாக் ஏற்ப இப்படி இருந்த நகுல் இப்படி ஆயிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். உண்மையாலுமே பாய்ஸ் படத்தில் நடித்த நகுலா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தற்போது உள்ள நகல் உள்ளார்.