தனது மனைவியின் உடையை அணிந்து போஸ் கொடுத்த நகுல் - காரணம் இது தானாம். குவியும் பாராட்டு.

By Rajkumar · 30/6/2021

அட்அட்றா நாக்க முக்கா நாக்க முக்கா' என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதோடு தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடி உள்ளார். அதை விட நடிகர் நகுல் அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் தெரிந்தது தான்.

மேலும், நகுல் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், பின்னணி பாடகரும் ஆவார். இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக விக்ரம் நடிப்பில் வந்த அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடியது. இதனை தொடர்ந்து கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களுக்கு பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.

சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் நகுல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுவந்தார் . கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வந்தார். நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் தான் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் இவரது மனைவியின் உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நகுல் மனைவி, எந்த வித தயக்கமும் இல்லாமல் உங்கள் ஆடையை அணியும் ஆண் கிடைப்பது சிறப்பு. எனக்கும் என் மகளுக்கு மட்டும் தான் ஒரே மாதிரி ஆடை இருக்கிறது என்று அவருக்கு கடுப்பு. அதான் இப்படி என்று பதிவிடுள்ளார். நகுலின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full