பல நாட்களாக தொல்லை அனுபவித்து வரும் நகுலின் மனைவி - அதுவும் ஒரு முறை அல்ல பல முறை.

By Arun · 24/4/2022

பல நாட்களாக தொல்லை அனுபவித்து வருகிறேன் என்று நகுலின் மனைவி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.

அதுமட்டுமில்லாமல் நகுல் பிரபல நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. நகுல் ஆரம்பத்தில் பயங்கர குண்டாக இருந்தாராம். பின் நடிப்பிற்காக இவர் தன்னுடைய உடலை குறைத்து நடிக்கத் தொடங்கினார். இதனிடையே இவர் பல ஆண்டுகளாக ஸ்ருதி என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

நகுலின் திரைப்பயணம்:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நகுல் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் நிகழ்ச்சியில் நடுவராகவும் களம் இறங்கி இருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இது ஒரு பக்கமிருக்க, நகுல் மற்றும் அவரது மனைவி இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார்கள். அதில் நகுலின் மனைவி சுருதி எப்போதும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு புகைப்படம், வீடியோ என்று பகிர்ந்து கொண்டு இருப்பார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சுருதி :

இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பல சமூக கருத்து குறித்தும் இவர் பதிவிட்டு வருகிறார். இவரின் விடியோவிற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார். மேலும், தான் போடும் வீடியோக்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் சில விஷ கிருமிகளால் பல நாட்களாக தான் அனுபவித்து வரும் தொல்லைகள் குறித்து நகுல் மனைவி ஸ்ருதி பகிர்ந்திருக்கிறார்.

சூர்தி பதிவிட்ட பதிவு:

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் தவறான குறுஞ்செய்திகளையும், ஆபாச புகைப்படங்களையும் அடையாளமற்ற போலி கணக்குகளிலிருந்து இவருக்கு அடிக்கடி சிலர் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனை சுருதி பலமுறை கண்டித்தும் அந்த குறுஞ்செய்திகளை அனுப்புவர்கள் அடங்கிய பாடில்லை. மேலும், அந்த ஆபாச பதிவியில் ஐ லவ் யூ எனவும் பதிவிட்டுள்ளனர். இதற்கு ஸ்ருதி கூறியது, எப்படி இந்த மாதிரி யாருக்கும் தெரியாத பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்புகிறிரிகள்? இது எனக்கு முதல் முறை அல்ல பலமுறை ஆபாச வீடியோக்கள் வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

பெண் ஒருவர் பதிவிட்ட பதிவு:

மேலும், இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பெண்ணொருவர் புகைப்படம் ஒன்றை ஸ்ருதிக்கு பகிர்ந்து அதில் அவர், இவ்வாறு அநாகரீகமின்றி புகைப்படங்கள் அனுப்புவர்களுக்கு நீங்கள் இதை திருப்பி அனுப்புங்கள் என கூறி சிறிய கத்திரிக்கோல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை ஸ்ருதி பகிர்ந்து கொண்டுள்ளார். இவ்வாறான சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பல பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கம் குறித்து தவறான தங்களுடைய கருத்துகளை எப்போதும் கூறிக் கொண்டிருக்கின்றனர் என்று சுருதி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full