சார்பட்டா படத்த எடுத்ததுக்கு உன்ன பாராட்ட மாட்டேன் - ரஞ்சித்துக்கு நாசர் கடிதம்.

By Rajkumar · 27/7/2021

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இதையும் பாருங்க : நடிகர் கிங் காங் மகன் இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க - வைரல் புகைப்படம்.

இந்த திரைப்படத்தில் 70 காலகட்ட பாக்சிங் பரம்பரைகளை பற்றி காண்பித்து இருந்தாலும் படம் முழக்க தி மு கவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல தான் பல காட்சிகளும், வசனங்களும் இருந்தது. அதே போல ரஞ்சித் எம் ஜி ஆரை தவறாக சித்தரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் இருக்கிறது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை தான் பெற்று இருக்கிறது.

இந்த படத்தை பல்வேரு திரையுலக பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் இந்த படம் குறித்து ரஞ்சித்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நாசர், தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உங்கையைப் புடிச்சி ஒரு நூறு முத்தங் கொடுத்து, 'நன்றி'ன்னு ஒரு வார்த்த மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எஞ் சமூகத்துக்கு கொடுத்ததுக்கு என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full