நான் மீண்டும் மீண்டும் சொல்லும் விஷயம் இது தான் - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த நடிகர் நட்டி நடராஜ்

By subhashini · 4/4/2026

இயக்குனர் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் TN 2026. இந்த படத்தினுடைய கதையை பிரபல நடிகர் தம்பி ராமையா எழுதியிருக்கிறார். இவருடைய மகன் தான் உமாபதி ராமையா. இவர்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், நட்டி நடராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தினுடைய டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தினுடைய டீசர் காட்சிகள் நடிகர் விஜயின் அரசியல் வருகையை விமர்சித்து எடுக்கப்பட்டதாக சோசியல் மீடியாவில் கூறப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த படம் வெளியாகுவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதோடு டீசரில் விஜயின் கெட்டப்பில் நட்டி நடராஜ் வந்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

TN 2026:

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் நட்டி நடராஜ், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த படத்தில் எந்த கட்சியையும் நாங்கள் தாக்கவில்லை. எந்த தலைவரையும் குறை சொல்லவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு காமெடி படம். படத்தில் நான் வித்தியாசமாக ஐந்து கெட்டப்புகளில் வருகிறேன். அதில் டீசரில் வெளியான கெட்டப்பும் ஒன்று. முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை மக்களை வாய்விட்டு சிரிக்க வைக்கிற படமாக தான் இது இருக்கும்.

நட்ராஜ் பேட்டி:

என்னோட கதாபாத்திரத்தின் பெயர் குல்கந்த் குமார். வடநாட்டிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்த ஒருவன் திடீரென்று ஸ்டாராகி அதன் பிறகு தமிழ்நாட்டில் என்ன நடக்குது? என்பது தான் படத்தினுடைய கதை. இந்த படத்தினுடைய கதையை தம்பி ராமையா சார் சொல்வதற்கு முன்னாடி அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுன்னு சொன்னார். நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்கள் பற்றியும் சொன்னார். நம்முடைய பாடத்திட்டங்களிலேயே அரசியல் ஒரு பாடமாக கொண்டு வந்திருக்கணும் என்றார். இந்த கதையை ராமையா சொல்லும் போது குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டு தான் கேட்டேன்.

https://www.youtube.com/watch?v=vIMVCCXTOJk

படம் பற்றி சொன்னது:

அதற்கு பிறகு உடனடியாக சூட்டிங் கிளம்பி விட்டோம். இதற்கு முன்னாடி ஒரு ஏழு எட்டு படங்கள் இயக்கின அனுபவம் கொண்டவன் மாதிரிதான் உமாபதியினுடைய இயக்கம் இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக பார்த்தார். எல்லா விஷயத்துக்குமே ரெஃப்ரன்ஸ் வைத்து விளக்கி வேலையெல்லாம் வாங்கினார். எனக்குமே அவர் இயக்கத்தில் நடித்தது எளிதாக இருந்தது. மறுபடியும் வலியுறுத்தி சொல்கிறேன். இந்த படத்தில் ஒரு தனிமனித தாக்குதலும் இல்லை. ஒரு குறிப்பிட்ட தலைவரை பத்தின படம் கிடையாது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்று கூறியிருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full