'Feature film'களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்யமாட்டேன், காரணம் - நடிகர் நட்டி ஓபன் டாக்

By ·

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பின்னர் கதாநாயகனாக அவதாரமெடுத்தவர் நட்டி நாகராஜ். இவர் நடிகராக வருவதற்கு முன்பு ஒளிப்பதிவாளராகத் தான் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதன் முதலில் யூத் படத்தின் மூலம் தான் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தான் இவர் பல படங்களில் பணியாற்றி இருந்தார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான புலி,துப்பாக்கி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளரும் இவர் தான் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

பின் இவர் மிளகாய் படத்தின் மூலம் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின் இவர் சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். இவர் நடித்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரைட்.

நட்டி திரைப்பயணம்:

இந்த படத்தை சுப்ரமணியன் ரமேஷ்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார்.இந்த படத்தில் அருண் பாண்டியன், ஆதித்யா ஷிவக், யுவினா பார்கவி, பிக் பாஸ் அக்சரா ரெட்டி, வினோதினி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் சர்ச்சையாகி இருந்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

நட்டி பேட்டி:

இதில் பேசிய நடிகர் நட்டி, இது ஒரு சுவாரசியமான படம். இயக்குனர் ரமேஷ் என்னிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர். அவர் கதை சொன்னபோது யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். அருண்பாண்டியன் சார் ஒரு கோ டைரக்டர் போல இதில் வேலை செய்திருந்தார். சமூக அக்கறைமிக்க ஒரு விஷயத்தை இயக்குனர் சொல்லி இருக்கிறார். உடனே செய்தியாளர், பாலிவுட்டில் உங்களை கேமராமேனாக பணியாற்றுவதற்கு தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நடிப்பதை முக்கியமாக கருதி தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். பாலிவுட்டில் மீண்டும் பெரிய படங்களில் கேமராமேனாக பணியாற்ற அழைத்தால் நீங்கள் செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=9ZSgcnfckWc

பாலிவுட் சினிமா பற்றி சொன்னது:

அதற்கு நட்டி, நல்ல கதை பெரிய நடிகர்கள் இருந்தால் நிச்சயமாக வேலை செய்வேன். கேட்கிற எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் அங்கு தருவார்கள். என்னுடைய தொழிலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைக்கும். இப்போது கூட ஏதாவது இடைவெளி கிடைத்தால் அங்கு சென்று பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். ஒளிப்பதிவாளராக 'Feature film' களில் மட்டும் பணியாற்றுவதை தவிர்த்து வருகிறேன். காரணம், 'Feature film' பணியாற்ற குறைந்தது ஒன்றை வருடம் ஆவது நேரம் ஒதுக்க வேண்டும். அதனால் தான் தவிர்த்து வருகிறேன். அதேபோல் சில கதைகள் சரியாக வருமா? என்ற சந்தேகமும் இருக்கிறது. அதனால் கேமரா மேனாக பணியாற்றுவது பாலிவுட்டில் சில படங்களில் தவிர்த்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை