மகனின் திருமணத்திற்காக ஜப்பான் கிளம்பியுள்ள நெப்போலியன், நெகிழ்ச்சியோடு அவரே வெளியிட்ட வீடியோ இதோ

By Rajkumar · 7/9/2024

நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அங்கே இவர் ஹைடெக் விவசாயி ஆகவும், பெரிய தொழில் அதிபராகவும் இருக்கிறார். இப்படி இவர் இருப்பதற்கு காரணமே அவருடைய மகன் தனுஷ் தான். தனுஷிற்கு நான்கு வயது இருக்கும்போதே தசைச் சிதைவு என்கிற நோய் ஏற்பட்டது. இதற்காக நெப்போலியன் பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தார். இருந்தும் பயன் இல்லாமல் போனது. மேற்கொண்டு இவர் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இந்த நோயை குணப்படுத்தி இருந்தார்.

நெப்போலியன் மகன்:

இருந்தாலுமே, அந்த நோய் முழுவதுமாக குணமாகவில்லை. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்டு நிலைமை யாருக்கும் நிகழக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு நெப்போலியன் திருநெல்வேலியில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியிருக்கிறார். பின் தனுஷ் உயர் சிகிச்சைக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கேயே தன் மகனுக்காக தங்கிவிட்டார். தனுஷுகு தன்னிடம் இருக்கும் குறையை மறந்து பல துறைகளில் சாதித்து இருக்கிறார்.

தனுஷ் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் நடத்திவரும் பல நிறுவனங்களை தனுஷ் தான் கவனித்து வருகிறார் ‌ இதனால் தனுஷுக்காகவே ஒரு தனி நிறுவனத்தை நெப்போலியன் உருவாக்கி இருக்கிறார். தற்போது தனுஷிற்கு 25 வயது ஆனால் நெப்போலியன் திருமண ஏற்பாடுகள் செய்திருக்கிறார். சமீபத்தில் தான் நெப்போலியன் மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்து தனுஷ் தன்னுடைய instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

View this post on Instagram

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

நெப்போலியன் மகன் திருமணம்:

மேலும், தனுஷின் உடல்நிலை பிரச்சினை காரணமாக அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது. அதனால் தனுஷ் இந்தியா வரவில்லை. நெப்போலியன் வருங்கால மருமகள் பெயர் அக்ஷயா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். அங்கு மூலக்கரை பட்டியில் சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் தான் அக்ஷயா. இவரைத்தான் நெப்போலியன் மூத்த மகன் திருமணம் செய்ய இருக்கிறார். தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஜப்பான் பறந்த நெப்போலியன்:

மேலும், திருமணத்திற்காக தனுஷ் இந்தியாவுக்கு விமானத்தில் வர முடியாத காரணத்தினாலும், கப்பலில் வந்தா ஒரு வாரத்துக்கு மேலாகும் என்பதாலும் ஜப்பானில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தனது மகன் திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து தனது குடும்பத்துடன் நெபோலியன் ஜப்பான் சென்றிருக்கிறார். இவர்கள் அனைவரும் கப்பலில் ஜப்பானுக்கு செல்கிறார்கள். அவர்கள் கிளம்பும் செய்தியை அறிந்து நெப்போலியனின் நண்பர்கள் பலர் வீட்டுக்கு வந்து வழி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோவை தான் நெப்போலியன் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full