'CSK தோற்றால் நான் என்ன பண்ணுவேன்' வைரலாகும் மீம்ஸ்க்கு நெப்போலியன் அளித்த பேட்டி.
'CSK தோற்றால் நான் என்ன பண்ணுவது' என்று நெப்போலியன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் 1963 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் குமரேசன். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. மேலும், இவர் இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
நெப்போலியன் திரைப்பயணம்:
நடிகர் நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இடையில் சில காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவரது குடும்பம் தற்போது அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு தனுஷ், குணால் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நெப்போலியன் ஹாலிவுட் பயணம்:
இவரின் மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கின்றனர். ஏன்னா, அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்து இருந்தார். நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=PgKazZE9XcQ
வைரலாகும் நெப்போலியன் மீம்ஸ்:
பின் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இருந்த சுல்தான் என்ற படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாகவே நெப்போலியன் உடைய மீம்ஸ் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது. அது வேற ஒன்னும் இல்லைங்க, நெப்போலியன் நடித்த சீவலப்பேரி பாண்டி என்ற படத்தில் இடம்பெற்ற 'என் வாழ்க்கை நாடகமா' என்ற பாடலை மீம்ஸ் ஆக மாற்றி ரசிகர்கள் அதிகமாக வைரலாகி வருகின்றன. இந்த மீம்ஸ் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நெப்போலியன் அளித்த பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் இந்த மீம்ஸ் குறித்து கேட்டதற்கு நெப்போலியன் கூறியிருப்பது, ஆமாம், நானும் பார்த்தேன். நல்லா தான் இருக்கிறது. அந்தப் பாட்டு கேட்கும் போது மனசை பிசைகிற மாறி இருக்கும். அந்த அளவிற்கு அருமையான பாடல். அதுவும் சிஎஸ்கே தோற்று விட்டால் கூட உடனே அந்த பாட்டை எடுத்து மீம்ஸ் போட்டுவிடுகிறார்கள். இதை எனக்கு இந்தியாவிலிருந்து அனுப்புகிறார்கள். நான் என்ன பண்ணுவேன் என்று நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார்.