அப்பாவுக்கு கேன்சர், அவருக்காக பிரார்த்தனை செய்ங்க - சீரியல் நடிகர் நேத்ரன் மகள் வெளியிட்ட வீடியோ
சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நேத்ரன். இவர் சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார். இவர் முதன் முதலாக 'மருதாணி' என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் பல சேனல்களில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இருந்தார். குறிப்பாக, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் ஜோடி நம்பர் 1' என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயா கலந்து இருந்தார்கள். இப்படி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மீடியாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
நேத்ரன் குறித்த தகவல்:
இதனிடையே இவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'முத்தழகு' என்ற தொடரில் நடித்து வருகிறார். அதேபோல் நேத்ரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பொன்னி' என்ற சீரியலில் வில்லன் ரோலில் நடித்து வருகிறார். பின் ரஞ்சிதமே என்ற தொடரில் நடித்து சமீபத்தில் தான் விலகி விட்டார்.
நேத்ரன் குடும்பம்:
மேலும், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் அபிநயா கடந்த ஆண்டு வெளிவந்த 'கனா காணும் காலங்கள்' என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவருடைய இரண்டாவது மகள் படித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அபிநயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது.
அபிநயா பதிவிட்ட வீடியோ:
அதில் அவர், எனக்கு இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. சில வாரமாகவே நாங்கள் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறோம். டெஸ்டில் அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் என்று வந்தது. அதனால் சர்ஜரி பண்ணி விட்டார்கள். ஆனால், கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்கு என்று ஐசியூவில் அப்பா இருக்காங்க. நான் ரொம்ப நாளா இதை உங்ககிட்ட ஷேர் பண்றதுக்கு தயங்கிக் கொண்டிருந்தேன்.
நேத்ரன் உடல்நிலை:
நீங்களும் எல்லோருமே அப்பாவுக்காக ப்ரே பண்ணுங்கள். அந்த பாசிட்டிவ்வால் அவர் சீக்கிரம் சரியாகி வருவார் என்று நான் நம்புகிறேன். அப்பா சீக்கிரம் சரியாகி வரணும். நீங்க எல்லோரும் ப்ரே பண்ணுங்க. நன்றி என்று பதிவிட்டிருந்தார். தற்போது இவருடைய போஸ்ட் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆறுதலாகவும், நேத்ரன் சீக்கிரமே குணமடைந்து வரவேண்டும் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.