சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் - நடிகை நிமிஷா சஜயன் ஓபன் டாக்

By subhashini · 26/7/2025

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நடிகை நிமிஷா சஜயன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக நிமிஷா சஜயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் மொழியில் வெளிவந்த படத்தின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமாகியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன் இவர் குறும்படங்களில் நடித்து இருக்கிறார்.

அதற்கு பின் இவர் மராத்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் சில படங்களில் கூட நடித்திருக்கிறார். பின் தமிழில் இவர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சித்தா படத்தில் ஹீரோயினியாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படமுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

நிமிஷா சஜயன் திரைப்பயணம்:

குறுகிய காலத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் அதர்வா நடிப்பில் வெளியாகிருக்கும் டிஎன்ஏ படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக் பாலாஜி பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நிமிஷா சஜயன் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்து இருக்கிறது.

நிமிஷா சஜயன் படங்கள்:

இதை எடுத்து இவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நிமிஷா சஜயன், சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் என்னுடைய கதாபாத்திரத்தை சுற்றி தான் படம் நகருகிறது. அந்த மாதிரியான கதைகளில் நடிப்பதை நான் தவற விட மாட்டேன். படங்களில் என்னுடைய கதாபாத்திரம் எதுவாக இருந்தாலுமே எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. கதைக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் என்னுடைய கதாபாத்திரம் இருந்தால் மட்டும் போதும், அதில் என்னுடைய நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை மட்டும் தான் முக்கியம்.

நிமிஷா சஜயன் பேட்டி:

சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி வரும் விமர்சனங்கள் ஒருபோதும் என்னை பாதித்தது கிடையாது. என்னை பொருத்தவரை நல்ல விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன். தவறு என்றால் என்னை நானே மாற்றிக்கொள்வேன். மற்றபடி என்னைப் பற்றி வரும் தேவையில்லாத நெகட்டிவான விமர்சனங்களை நான் கண்டு கொள்வதே கிடையாது. மேலும், dna படத்தில் எனக்கு அம்மா கதாபாத்திரம்தான் கிடைத்தது. எனக்கு திருமணம் ஆகவில்லை. இருந்தாலுமே கதைக்கு ஏற்றபடி நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அதற்கான எமோஷனை எனக்குள்ளே நான் ஏற்படுத்திக் கொள்வேன்.

சினிமா பற்றி சொன்னது:

நடிப்பு என்பது ஒரு தவம். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் என்னை வருத்தி உழைக்க தயார். அந்த படத்தில் என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்ததாக சொல்லி பலருமே பாராட்டி இருந்தார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. பெரிய பட்ஜெட் படங்கள் வெற்றி அடைவது பெரிய விஷயம் கிடையாது. சின்ன பட்ஜெட் படங்கள் ஹிட் அடிப்பது தான் ரொம்பவே முக்கியமான விஷயம். அந்த வகையில் இயக்குனர்களின் நடிகை என்று என்னை அழைப்பதில் எனக்கு சந்தோசமாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full