என்னது நடிகர் பாண்டியராஜனுக்கு 3ன்று மகன்களா ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

By Ajju · 7/3/2018
80களின் துவக்கத்தில் பெயர் போன நடிகர்களுள் நடிகர், பாண்டியராஜனும் ஒருவர். இவரது முழுப்பெயர் பாண்டியராஜன் ரத்னம் ஆகும். இவர் சென்னை சைதாப்பேட்டையில் பிறந்தார். முதலில் கல்லூரி படிப்பை முடித்த உடன் படங்களில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் தனது உயரம் குறைவு என்பதால் அந்த ஆசையைவிட்டு விட்டு இயக்குனராக முடிவெடுத்தார். பின்னர் இயக்குனர் கே.பாக்யராஜிடம் சென்று துணை இயக்குனராக சேர்ந்தார். அதன்பின்னர், சில வருடங்கள் கழித்து கன்னி ராசி என்ற படத்தை இயக்கினார். 1986ஆம் ஆண்டு ஆண் பாவம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அன்றைய காலத்தில் இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக வலம் வந்த அவிநாசி மணியின் மகள்தான் இந்த வாசுகி. பாண்டியராஜன் மற்றும் வாசுகி ஆகியோருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். பல்லவராஜன் (31), பிரித்திவ் ராஜன் (29), பிரேம்ராஜன் (27). இதில் இரண்டாவது மகன் பிரத்திவ் ராஜன் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு தன் அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் 'கைவந்த கலை' என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்திய சினிமா துறையினருக்கு வைக்கப்பகப்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருகிறார் பிரித்திவ் ராஜன். மேலும், வாய்மை, முப்பரிமாணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்ட்ரீட் லைட்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full