Six Pack வைத்த சூரி..! 8 மாத உழைப்பு.! சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

By Ajju · 12/9/2018
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் சந்தானம் மற்றும் வடிவேலுவின் வெற்றிடத்திற்கு பிறகு , அந்த இடத்தை நிரப்பி தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளவர் காமெடி நடிகர் சூரி. ஆரம்பகாலத்தில் துணை கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் ஒரு ஓரமாக தலை காண்பித்து வந்த சூரி, இன்று ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். தற்போது தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் இவரையே காமெடியனாக கமிட் செய்து வருகின்றனர். அதிலும் சிவகார்த்திகேயன் படங்களில் இவரை பெரும்பாலும் கமிட் செய்து விடுகின்றனர். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள "சீமாராஜா" படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூரி, இந்த படத்திற்காக தானும், சிவகார்த்திகேயனும் சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக ஒரு சூப்பர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதற்காக பல மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்தாராம் சூரி. ஆனால், சூரி இந்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்துள்ளேன் என்று விளையாட்டாக கூறியிருந்தார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த படத்திற்காக உண்மையாகவே 8 மாதங்கள் கடுமையாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார். நடிகர் சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை நடிகர் சிவகார்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் சூரியின் உடலை பார்த்து அனைவரும் வாயடைத்து போயுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை நடிகர்கள் தான் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், காமெடி நடிகரான சூரியும் "சீமராஜா" படத்தில் சிக்ஸ் பேக்கில் வரவிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேலை சூரியும் விரைவில் ஹீரோவாக மாறி விடுவாரோ?
behindtalkies AMP · Quick view
View full