விஜய் நேரில் சென்று பார்க்காதது தவறா? பார்த்திபன் கொடுத்த தரமான பதிலடி - என்னன்னு நீங்களே பாருங்க
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பார்த்திபன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது இவர் படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்
எஸ்ஆர்எம் ப்ரைம் மருத்துவமனையில் மேம்பட்ட ஆராய்ச்சி தொடக்க விழா நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருந்தார். அதில் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் மற்றும் திரையுலகம் குறித்து சொன்னது தொடர்பாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு பார்த்திபன், முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஆதரிக்க கூடாது என்று அஜித் சொல்லியிருந்தார். முதல் நாள் முதல் காட்சியை வைத்து தான் ஒரு நடிகருடைய சம்பளமே முடிவு செய்யப்படுகிறது.
பார்த்திபன் பேட்டி:
அவர் எப்போதும் வேறு ஒரு உயரத்தில் வேறு ஒரு பார்வையில் இருக்கிறார். அவர் சொன்னதில் எனக்கு உடன்பாடான விஷயம் என்னவென்றால் என்னிடம் ஒரு தொகுப்பாளர், 4.5ஆண்டு கால திமுக ஆட்சி எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். ஒருவருக்கு ஐந்து வருடங்கள் கொடுக்கிறோம். அவர்களுக்கு அதை முழுமையாக கொடுக்க வேண்டும். ஆனால் நாம் ரெண்டரை வருடத்திலேயே விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தேன். இதே போன்ற ஒரு கருத்தை தான் அஜித் கூறியிருந்தார். 5 வருடங்களை கொடுத்து விட்டோம் என்றால் முழுமையாக ஆட்சி புரியட்டும்.
https://www.youtube.com/watch?v=lu7iXiFoLiI
அஜித் பற்றி சொன்னது:
அதில் உடன்பாடு இல்லை என்றால் மீண்டும் வரும் தேர்தலில் நாம் காட்டலாம் என்று அஜித் சொல்லியிருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. முதல் நாள் முதல் காட்சி சீட்டை கிழிப்பது, அபிஷேகம் என்ற பெயரில் நடப்பது என இது எல்லாம் தான் ஏன்? எதற்கு? என்று சொல்கிறார். கூட்ட நெரிசலால் நிகழ்ந்த இழப்புகளை மனதில் வைத்து தான் இனி இப்படி நிகழக் கூடாது என்று அஜித் பேசியிருக்கிறார். எல்லோருடைய பார்வைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. அதே போல் அவருடைய பார்வைக்கும் மரியாதை இருக்கிறது. மேலும், கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் காரணம் இல்லை என்று அஜித் சொல்லியிருந்தார்.
விஜய் பற்றி சொன்னது:
விஜய் அவர்கள் மட்டும் பொறுப்பேற்க முடியாது. நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். அதன் உள்நோக்கங்களை அரசியல் ஆக்க வேண்டாம். மறுபடியும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நான் அந்த பதிலிலிருந்து புரிந்து கொண்ட விஷயம். பின் நானாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து இருப்பேன் என்று ஆவேசமாக சொல்கிறோம். நடைமுறையில் அது முடியுமா? இதுதான் சரி, அதுதான் தவறு என்று கிடையாது. அவருக்கு அது சரி என்று தோன்றுகிறது. அதை செய்கிறார் அந்த குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவ்வளவு தான் வேண்டியது என்று கூறி இருக்கிறார்.