நான் சாதி வெறியன் இல்லை, நான் அப்படி பேச இது தான் காரணம் - பார்த்திபன் கொடுத்த விளக்கம் வீடியோ

By subhashini · 28/3/2026

சமீப காலமாக பார்த்திபனின் சாதி சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி கொண்டு இருக்கிறது. அதாவது, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த படத்தின் நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன், தான் ஒரு நாயுடு பையன் என்று பேசியிருந்தார். இதை தான் சோசியல் மீடியாவில் பெரிய வாதமாகவே வைத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழைப் பெருமையாகவும் ஜாதி மத பேதங்களை ஒழிப்பதாகவும் பேசிக்கொண்டு மற்ற மாநிலங்களுக்கு சென்றவுடன் தன்னுடைய சமூகத்தை உயர்த்தி பேசுவது நியாயமா? என்றெல்லாம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=D_8cqiTZ178

அதோடு பார்த்திபனை கடுமையாக விமர்சித்தும் ட்ரோல் செய்தும் இருக்கிறார்கள். இதற்கு பார்த்திபன் மன்னிப்பு கேட்டு டீவ்ட் ஒன்று போட்டிருந்தார். பார்த்திபன் தரப்பிலிருந்து பலமுறை இந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தாலும் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்களும் கேள்விகளும் வைக்கப்பட்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இதற்கு பார்த்திபன் அவர்கள் ஜாதியில்லை மதம் இல்லை என்று சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பார்த்திபன் சாதி சர்ச்சை:

அதில் அவர், நான் ஆந்திராவில் துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த படத்தின் விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு நான் பதற்றமாகத்தான் இருந்தேன். என்ன பேச வேண்டும் என்று கூட நான் எழுதி வைத்துக்கொண்டுதான் போனேன். அந்த மேடையில் நான் பேசுவதற்கு முன்பு என்னை சந்தித்த ஒருவர், நீங்கள் நாயுடா? என்று கேட்டார். நான், ஆமாம் என்று சொன்னேன். அவர் கேட்டது என் மனதிற்குள் பதிந்தது.
டக்குனு யோசிக்காமல் சொல்லிவிட்டேன். நான் தெலுங்கு என்று சொல்வதற்கு பதிலாக நாயுடு அப்பாய் என்று சொல்லிவிட்டேன். அதுவே மேடைக்கு போனதும் பதட்டத்தில் ஒரு முறைக்கு இரண்டு முறை நான் சொல்லி விட்டேன்.

https://www.youtube.com/watch?v=6BKWOuHSddg

பார்த்திபன் வீடியோ:

இதனால் நான் பெரிய பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டும் இதை யாருமே விடுவதாக இல்லை. உண்மையில் எனக்கு ஜாதி வெறி இருந்திருந்தால் நான் அப்படியே விட்டு இருப்பேன். அதற்காக விளக்கமும் கொடுத்திருக்க மாட்டேன். ஆனால், இந்த சம்பவம்
என்னை ரொம்பவே மனதளவில் பாதித்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் இப்படி கஷ்டப்பட்டதே கிடையாது. நான் சாதி வெறியன் கிடையாது. ஜாதி மதம் இல்லை என்று சொல்வது தான் எனக்கு விருப்பம். என்னுடைய படங்களிலும் பொது வாழ்க்கையிலும் ஜாதிக்கும் மதத்திற்கும் நான் குரல் கொடுத்து பேசியதே கிடையாது. இதனால் தான் நான் என்னுடைய பிறப்பு சான்றிதழை மாற்ற முடிவு செய்தேன்.

View this post on Instagram

A post shared by Nikil Murukan (@onlynikil)

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

எனக்கு தெரிந்த நீதிபதியிடம் கேட்டேன். அவர்களும் முடியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு தான் நான் No Caste No Religion சான்றிதழ் பெற விண்ணப்பித்தேன். அதற்காக நான் எல்லா உயரதிகார்களையும் சந்தித்தேன். இப்போது தேர்தல் நேரம் நடந்து கொண்டிருப்பதால் சான்றிதழ் கிடைக்காது என்றார்கள். விரைவில் எனக்கொரு certificate கிடைக்கும். அதற்கு முன்பாக ஒரு G O கிடைக்கும். இதுவரை பள்ளி குழந்தைகளுக்கு தான் இந்த சான்றிதழ் வாங்கி இருக்கிறார்கள். முதன்முதலாக ஒரு அடல்ட்
இந்த சான்றிதழ் வாங்குவதில் எனக்கு பெருமை. சினிமா துறையில் நான் தான் இந்த சான்றிதழை வாங்கி இருக்கிறேன். இது தொடர்பாக நான் விழிப்புணர்வு ஒன்றை நடத்தவும் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்..

Tamil Behind Talkies AMP · Quick view
View full