தவறு நடந்து விட்டது, ஆனால் எனக்கு எந்த உள் நோக்கமும் லாபமும் இல்லை- நடிகர் பார்த்திபன் பதிவு

By ·

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான பாணியில் கதைகளை கொடுப்பதில் வல்லவர் பார்த்திபன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளிலும் சோசியல் மீடியாவிலும் இவர் பேசும் கருத்து இணையத்தில் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

https://www.youtube.com/watch?v=6M3ClW9XrdY

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் திரிஷாவை, குந்தவையை வீட்டுக்குள்ளே குந்த வைத்தால் நல்லது என்று பேசி இருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. திரிஷா கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு பார்த்திபன் மன்னிப்பும் கேட்டிருந்தார். இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த படத்தின் நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன், தான் ஒரு நாயுடு பையன் என்று பேசியிருந்தார்.

பார்த்திபன் சர்ச்சை:

இதை தான் தற்போது சோசியல் மீடியாவில் பெரிய வாதமாகவே வைத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் வரைதமிழைப் பெருமையாகவும் ஜாதி மத பேதங்களை ஒழிப்பதாகவும் பேசிக்கொண்டு பிற மாநிலங்களுக்கு சென்றவுடன் தன்னுடைய சமூகத்தை உயர்த்தி பேசுவது நியாயமா? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், Spelling mistakes மட்டுமல்ல, எல்லாத் தவறையும் உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவன் நான். எனவே சீர் செய்து re-post.

https://www.youtube.com/watch?v=D_8cqiTZ178

பார்த்திபன் பதிவு:

சத்தியமாக சொல்கிறேன், எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன்.
இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை