அஜித்தை கலாய்த்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன் - என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

By subhashini · 17/1/2025

அஜித்தை கலாய்த்த விஜய் ரசிகர்களுக்கு பார்த்திபன் போட்டு இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் ‘துணிவு’. இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் என பலரும் நடித்திருக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

விடாமுயற்சி படம்:

மேலும், ஆக்ஷனும் எமோஷனும் கலந்த இக்கதையின் பெரும் பகுதி வெளிநாட்டில் நடக்கிறது.
இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் முதல் சிங்களான ‘சவதீகா’ பாடல் வெளியாகி பயங்கர ட்ரெண்டிங் ஆனது. பின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தினுடைய டீசர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விடாமுயற்சி படத்தின் டீசர்:

தற்போது சோசியல் மீடியாவில் விடாமுயற்சி படத்தின் டீசரை தான் விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். காரணம், விடாமுயற்சி படத்தில் அஜித் உடைய லுக் லியோ படத்தில் விஜய் நடித்த பார்த்திபன் கதாபாத்திரத்தை காப்பி அடித்தது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதை தான் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் போட்ட பதிவில், அஜித் என்னை போல் இருக்கிறார் என்று சொன்னதற்கு நன்றி.

பார்த்திபன் பதிவு:

என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி பரணி. தரணி போற்றும் தனிப்பெரும்
Style-க்குரியவர் AK.incomparable style-க்கு சொந்தக்காரர்,கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட, சில இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை ‘அமர்களம்’சரண் அவர்களிடம் கூறினேன் பெருமையாக என்று கூறி இருக்கிறார். தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பார்த்திபன் திரைப்பயணம்:

தமிழ் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த படம் ‘டீன்ஸ்’. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை தான் பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full