தூய்மைப் பணியாளர் பத்மா காலை தொட்டு பூஜை செய்த நடிகர் பார்த்திபன் - வைரலாகும் வீடியோ

By subhashini · 5/2/2026

சென்னையில் தியாகராய நகர் பகுதியில் முப்பாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வண்டிக்காரன் சாலை பகுதியில் பத்மா தூய்மை பணியில் கடந்த மாதம் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் கிடந்த ஒரு பையை பத்மா கையில் எடுத்திருக்கிறார். அந்த பையில் தங்க நகைகள் இருப்பதை பார்த்த பத்மா, தன்னுடைய மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். பத்மா ஒப்படைத்த பையில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 சவரன் நகைகள் இருந்தது தெரிய வந்தது.

பின் விசாரணையில் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் இதே அளவு நகைகள் தான் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். பின் பத்மா கொடுத்த அந்த நகைகள் அவருடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது. பிறகு அந்த நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் மிக வைரலாகி இருந்தது. பலருமே தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி இருந்தார்கள். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கி இருக்கிறார்.

பத்மா செயல்:

பின் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து அவருடைய நேர்மையே பாராட்டி இருந்தார். அது மட்டும் இல்லாமல் ரஜினி, தங்க செயின் ஒன்றையும் பத்மாவிற்கு பரிசாக அளித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பத்மாவின் குடும்பத்தினர் எல்லோருமே சேர்ந்து ரஜினிகாந்துடன் எடுத்து புகைப்படமும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தூய்மை பணியாளர் பத்மாவின் காலில் பாதணியை அணிவித்து பாத பூஜையும் செய்து கௌரவ படுத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=WvkZmhVJ_w8

பத்மா காலில் விழுந்த பார்த்திபன்:

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிக வைரலாகி இருந்தது. இது குறித்து பார்த்திபன் போட்ட பதிவில், தங்கத்தின் மதிப்பு ஏற மனிதன் உடைய மரியாதையை புரிந்து கொண்டே போகிறது. ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும் போது லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்த்தது அந்த ஒரு செயலின் மூலம் உலக மகா உன்னத மனுசியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

பார்த்திபன் பதிவு:

என்னை சீப் கெஸ்ட் ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு நான் வெறும் கெஸ்ட் ஆகவும், சீப் ஆக பத்மாவை அழைத்துச் சென்று பாதனி அணிவித்து பாத பூஜை செய்து புடவை போர்த்தி உலக அழகி என்ற கிரீடமும் சூட்டி நான் பேரழகன் ஆனேன் என்று கூறியிருக்கிறார். தற்போது பார்த்திபனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full