நேரில் பார்த்த மாதிரி வாய்க்கு வந்தத எல்லாம் சொல்றாங்க , ஆனால் - நடிகர் பொன்னம்பலம் எக்ஸ்குளுசிவ்

By subhashini · 11/2/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவர் சண்டை பயிற்சியாளராக வந்து தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தார். பின் இவர் சிறந்த வில்லன் என்று பெயர் எடுத்தவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் பொன்னம்பலம் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தார். இதற்கிடையில் கடந்த சில வருடமாக இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். குறிப்பாக, நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் சிகிச்சை எடுத்து இருந்தார்.

அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன், சிரஞ்சீவி, தனுஷ், சரத்குமார் என பலர் உதவிசெய்து இருந்தார்கள். அதற்கு பின் குணமடைந்து பொன்னம்பலம் வீடு திரும்பினார். பின் இவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. கடந்த ஆண்டு இவருக்கு மேலும் ஒரு சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. பின் இவர் குணமாகி வீட்டிற்கு வந்திருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் இவர் வீழ்ச்சேரில் உட்கார்ந்தபடியே நடனமாடிய வீடியோ படு வைரலாகி இருந்தது. அதை பார்த்து பலரும் எப்படி இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டார்? சிகிச்சை முடிந்து விட்டதா? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கேள்வி மேல் கேள்வி கேட்டிருந்தார்கள்.

பொன்னம்பலம் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பொன்னம்பலம், என் உடம்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஸ்டண்ட் மேன் ஆகவும் இருந்திருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டன்ஸ் செய்து இருக்கிறேன். அதன் தாக்கம் தான் இது. சமீபத்தில் என்னுடைய சகோதரி இறந்துவிட்டார். அந்த துக்கம் தாங்க முடியாமல் தான் நடனம் ஆடி இருந்தேன். அதை பார்த்து பலரும் ஏதேதோ சொல்லி இருந்தார்கள். ஆனால், எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. என்னுடைய அக்கா மறைந்த கவலை தாங்க முடியவில்லை.

சர்ச்சைகளுக்கு பதில்:

நான் வீழ்ச்சாரில் இருந்ததை பார்த்து பலரும், நேரடியாக என்னை பார்த்த மாதிரி பல கதைகளை சொல்லி இருந்தார்கள். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து மது அருந்துவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமார் முதல் ஷங்கர் வரைக்கும் பெரிய இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருக்கிறேன்.
இதை ஆதாரத்துடன் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். சிலர் இதுதான் சந்தர்ப்பம் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டு போகிறார்கள். நான் பணியாற்றிய இயக்குனர்கள் அதை பார்த்தால் அவர்களுக்கு சிரிப்பு தான் வரும்.

https://www.youtube.com/watch?v=xiyCqrsGfSc

தன்னுடைய நிலைமை பற்றி சொன்னது:

வெளியில் பேசுற கதைகளை கேட்பதற்கு எனக்கு நேரமில்லை. நம்ம வேலையை பார்த்துக்கொண்டு போய்விடனும். நிறைய பேரு எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் எனக்கு தெய்வங்கள் தான். சிரஞ்சீவி சார், சரத்குமார் சார், தனுஷ்ன்னு பலருமே எனக்கு உதவி செய்கிறார்கள். வெளியில் பேசுற மாதிரி நான் தவறானவராக இருந்தால் இத்தனை பேரும் எனக்கு உதவி செய்வார்களா? இப்போது வரைக்கும் உழைத்து சாப்பிடுவதால் தான் ஆண்டவன் எனக்கு உயிரை தந்து வைத்திருக்கிறான். கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்க தொடங்கி விடுவேன். சில தேவைகள் இருக்கிறது. சில விஷயங்கள் நடந்ததும் வெளிநாட்டுக்கு போய் ரெடி பண்ணிட்டு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full