சீரியலில் களமிறங்கிய பவர் ஸ்டார். எந்த சேனல்ல ? எந்த சீரியல்ல தெரியுமா ?

By Rajkumar · 29/5/2021

தமிழில் லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா,ஐ , கோலி சோடா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பவர் ஸ்டார் மிகவும் பிரபலமடைந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் அக்குபஞ்சர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மீது இருந்த மோகத்தால் இவர் தானே ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தார்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு திரையரங்கில் அந்த படத்தை 100 நாட்கள் ஓட வைக்க இவரே பணம் கொடுத்து அந்த படத்தை ஓட வைத்துள்ளார் என்பது தான். தமிழ் சினிமாவில் தனக்கு போட்டி ரஜினி தான் என்று சபதம் எடுத்து இறங்கிய பவர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து எந்திரன் படத்தில் கூட நடித்தார். தற்போது கொரோனா ஊரடங்கு பிரச்சனையால் படங்கள் எதுவும் இல்லை.

இதனால் தற்போது சீரியல் பக்கம் வந்துவிட்டார் பவர் ஸ்டார். அதுவும் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ஜோதி சீரியலில் தான். தற்போது முழு ஊரடங்கள் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் பல சேனல்கள் பழைய சீரியல்களை ஒளிபரப்ப துவங்கி இருக்கிறது.

ஜோதி என்ற புதிய சீரியல் வரும் மே 29 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஆனால், இது டப்பிங் சீரியல் தான். இந்த சீரியலை ஏற்கனவே சன் டிவி ஒரு 25 எபிசோடுகள் ஒளிபரப்பி பின்னர் நிறுத்தியது. மேலும், இந்த சீரியல் ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் தான் பவர் ஸ்டார் நடித்து உள்ளாராம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full