ஒருவழியாக திருமணத்திற்கு ஓ.கே சொன்ன பிரபாஸ்...! அவரே வெளியிட்ட தகவல்..!

By Ajju · 27/9/2018
பாகுபாலி ஜோடி அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஆகியோர் இருவரும் காதலில் உள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கடந்த பல மாதங்களாக வதந்திகள் வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த வதந்திக்கு முற்றுபுள்ளி கிடைத்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே அனுஷ்கா மற்றும் பிரபாஸ் காதலில் இருந்து வருவதாக சில கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இசை வெளியிட்டு விழாவின் போது பேசிய அனுஷ்கா, நானும் பிரபாஸும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் காதல் இல்லை என்று தெளிவுபடுத்தினார். இதையே தான் பிரபாஸும் கூறிவந்தார். இதன் பின்னர் பாகுபாலி படத்தின் முதல் பாகம் வந்தவுடம் பிரபாசுக்கு 6000 திருமணம் வரன்கள் வந்தது என நடிகர் பிரபாஸ் முன்னர் கூறி இருக்கிறார். இந்நிலையில் பிரபாஸுக்கு எப்போது திருமணம் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி தனது 39 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அவரது பிறந்தநாளையொட்டி திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் பிரபாஸ் வெளியிடயுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த தகவலால் பிரபாஸின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full