வலிமை படத்தில் இணைவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். பிரபல நடிகர் ட்வீட்.

By Rajkumar · 18/1/2020

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் அஜித் குமார். கடந்த வருடம் தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமும் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் நேர்கொண்டபார்வை படத்தில் தல அஜித் அவர்கள் வழக்கறிஞர் பரத் சுப்பிரமணியம் என்ற கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருந்தார். அவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது என்றும் சொல்லலாம். நேர்கொண்டபார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து வலிமை படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

https://twitter.com/thisisanas_/status/1218417503766044672

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எனவும் தெரியவந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்காக தல அஜித் அவர்கள் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீப காலமாகவே தல அஜித் படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டலில் நடித்து இருந்தார். ஆனால், இந்த வலிமை படத்தில் நம்ம தல பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். அதுவும் ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படம் இயக்குனர் வினோத்தின் சொந்த கதையை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் தீபாவளிக்கு தான் திரையரங்கில் வலிமை படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். இதனால் இந்த படம் குறித்து தகவல்கள் வர இன்னும் 6 மாதமாவது ஆகும். அதோடு புதிய அப்டேட்கள் எதுவும் கிடைக்காது என்று கூறி வருகிறார்கள். இதனால் தல ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள். இன்னும் வலிமை படத்தின் ஹீரோயினை குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், நடிகை யாமி கவுதம் அவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவர் தெலுங்கு,தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி,ஹிந்தி என பல படங்களில் நடித்து உள்ளவர்.

தற்போது இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசன்னா. இவர் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வைரலானது. இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரசன்னா அவர்கள் கூறியது, இன்னும் தெரியல ப்ரோ, ஆனா கன்போர்ம் ஆகல என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் ஒரு நல்ல நியூஸ் கொடுப்பீங்க என்று பார்த்தோம் இப்படி சொல்லிட்டீங்களே என்று வருத்தப்பட்டு கூறினார். நடிகர் பிரசன்னா இந்த படத்தில் நடிப்பாரா? இல்லையா? என்பது படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

behindtalkies AMP · Quick view
View full