இரண்டாம் திருமணம் பற்றி முதல் முறையாக மனம் திறந்த நடிகர் பிரசாந்த்- என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

By subhashini · 5/8/2024

இரண்டாம் திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து நடிகர் பிரசாந்த் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது. பின் இடையில் இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறைய தொடங்கியவுடன் இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார்.

இதனால் பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் அப்பப்போ துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இவர் 'அந்தகன்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார்.

அந்தகன் படம்:

இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக். மேலும், இந்த படம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் பிரசாந்த் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் பிரசாந்த் இடம் இரண்டாம் திருமணம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

பிரசாந்த் பேட்டி:

அதற்கு பிரசாந்த், திருமணம் கண்டிப்பாக நடக்கும். திருமணத்திற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை அடுத்து உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று கேட்டதற்கு பிரசாந்த், ஒரு பெண்ணாக இருந்தால் போதும் என்று பதில் அளித்திருக்கிறார். நடிகர் பிரசாந்தின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவரின் திருமண வாழ்க்கை தான். நடிகர் பிரசாந்துக்கு கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்ற பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

முதல் திருமணம்:

திருமணம் ஆகி சில நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரசாந்த் மற்றும் மனைவி மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். பின் நடிகர் பிரசாந்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது. இப்படி திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தால் நடிகர் பிரசாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

பிரசாந்த் தந்தை சொன்னது:

சமீப காலமாக இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வந்து பிரசாந்த் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரின் தந்தை முடிவு செய்துள்ளார். இந்த முறையும் வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று பிரசாந்த் உறுதியாக இருக்கிறாராம். அதோடு பிரசாந்த் நடிக்கும் படங்கள் வெளியானதும், பெண் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். இந்த முறை நன்கு விசாரித்து பெண் எடுக்க வேண்டும் என்று நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full