விழிப்புணர்வு செய்ய வேண்டிய நீங்களே ஹெல்மெட் போடாமல் போலாமா? நிரூபர் கேள்விக்கு பிரசாந்த் பதில்
அந்தகன் படத்தின் பிரமோஷனுக்காக ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிய சர்ச்சைக்கு நடிகர் பிரசாந்த் கொடுத்திருக்கும் பதில் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது. பின் இடையில் இவருடைய மார்க்கெட்டு சினிமாவில் குறைய தொடங்கியவுடன் இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார்.
இதனால் பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் அப்பப்போ துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இவர் ‘அந்தகன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, சமுத்திரகனி, ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
அந்தகன் படம்:
இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் பிரசாந்த் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=1PpanTdhYsk
ஹெல்மட் அணியாமல் வண்டி ஒட்டிய பிரசாந்த்:
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஹெல்மெட் அணியாமல் சாலையில் வண்டி ஓட்டிய படியே வித்தியாசமாக பேட்டி கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு பின்னால் தொகுப்பாளினியும் ஹெல்மெட் அணியாமல் இருந்தார். குறிப்பாக, பாண்டி பஜார் சாலையில் ரசிகர்களுக்கு கை காட்டியபடியே வண்டி ஓட்டி இருந்தார் பிரசாந்த். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருந்தது. இதை பார்த்த பலருமே கண்டனம் தெரிவித்தும் இருந்தார்கள்.
நெட்டிசன்கள் கண்டனம்:
அதிலும் சிலர், சாதாரண மக்களுக்கு தான் போக்குவரத்து விதியா? பிரபலங்களுக்கு எல்லாம் கிடையாதா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேட்டிருந்தார்கள். இதனை அடுத்து பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக நடிகர் பிரசாந்த்துக்கும், தொகுப்பாளினிக்கும் தலா ஆயிரம் ரூபாய் விதம் 2000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது தொடர்பாக பிரசாந்த் இடம் செய்தியாளர்கள், விழிப்புணர்வு செய்ய வேண்டிய நீங்களே ஹெல்மெட் போடாமல் போலாமா? என்று கேட்டிருக்கிறார்கள்.
பிரசாந்த் கொடுத்த விளக்கம்:
அதற்கு பிரசாந்த், சமீப காலமாக கடந்த ஒரு வருடமாகவே நான் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து நிறைய செய்திருக்கிறேன். இது தொடர்பாக நிறைய பேட்டிகள் கொடுத்தும் இருக்கிறேன். இதை நீங்களுமே நிறைய செய்திகளில் போட்டிருக்கிறீர்கள். நிறைய ஊடகங்கள் மூலமாகவும் நான் நிறைய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு செய்திருக்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதி, தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுங்கள். இது எனக்கு இல்ல, உங்களுக்கும், உங்க குடும்பத்திற்கும் பாதுகாப்பு. வண்டி எடுப்பதற்கு முன்பு எல்லாம் தயாராக வைத்து கொண்டு செல்லுங்கள். அவசர அவசரமாக வண்டி ஓட்டிக்கொண்டு போகாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.