தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன். சிம்பு இயக்கி, நடித்த ‘வல்லவன்’ படத்தில் பிரேம்ஜி அமரன் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘சென்னை 28’ படத்தில் முழு நீள காமெடி ரோலில் பிரேம்ஜி நடித்திருந்தார். ‘சென்னை 28’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சென்னை 28’ படத்துக்கு பிறகு “சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா” என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 – 2” போன்ற படங்களில் பிரேம்ஜி அமரனுக்கு அதிக ஸ்கோப் இருக்கும். காமெடியனாக மட்டுமே வலம் வந்த பிரேம்ஜி அமரன், 2015-ம் ஆண்டு வெளியான ‘மாங்கா’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.ராஜா இயக்கியிருந்தார்.

Advertisement

ஒரு நடிகராக மட்டுமின்றி பிரேம்ஜி அமரன் “துணிச்சல், நெஞ்சத்தைக் கிள்ளாதே, தோழா, அதே நேரம் அதே இடம், என்னமோ நடக்குது, அச்சமின்றி, ஜாம்பி” போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும், பிரேம்ஜி முரட்டு சிங்கிள் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், பிரேம்ஜி திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் காலம் முழுவதும் திருமணம் செய்துகொள்ள போவது இல்லை என்று அறிவித்துள்ளார் பிரேம்ஜி.

இதுகுறித்து பேசிய அவர், வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறி விட்டேன். என்னுடைய வாழ்க்கையில நிம்மதியா, ஜாலியா இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டி எல்லாம். தனியாக வாழ்ரது தான்மகிழ்ச்சி. மத்தவங்களுக்காக வாழ விரும்பல. எனக்காக வாழ ஆசைப்படுற. கல்யாணம் பண்ண சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினாங்க, ஆனா, முடியவே முடியாதனு சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார் பிரேம்ஜி.

Advertisement
Advertisement