பிரிதிவிராஜின் கருத்துக்கு எதிராக தமிழகத்தில் அவருடைய புகைப்படங்களை எரித்தும், கோஷமிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் பாய்ந்து அங்கிருக்கும் உயிர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆனால், அதிலிருந்து வரும் தண்ணீரை கேரளா தேக்கி வைத்துக்கொண்டு தமிழகத்தை தொடர்ந்து கஷ்டப்படுத்தி வருகிறது. மேலும், முல்லை அணை பழுதடைந்து விட்டது என்று கேரள அரசியல்வாதிகள் நடத்திய நாடகத்தை தமிழக அரசு கண்டுபிடித்து இதெல்லாம் வெறும் நாடகம் என்று நிரூபித்தது. இதனிடையே கேரளாவில் மழை பெய்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.

இந்நிலையில் கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. முல்லை, பெரியார் அணையை பிற அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்து வெளியேற்றுகிறார்கள். இது தான் உண்மையாக நடக்கும் நிகழ்வு. ஆனால், முல்லை, பெரியார் அணையால் தான் கேரளாவுக்கு இவ்வளவு பிரச்சனையும், துன்பமும் வருகிறது என்று பலர் பேசிவருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிருத்திவிராஜ் அவர்கள் இது குறித்து கருத்து ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, 125 ஆண்டுகள் ஆன அணையை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

இவர் பதிவிட்ட கருத்தை பார்த்துட்டு பலரும் கொந்தளித்து போய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் அணைக்கு வயது நிர்ணயம் செய்ய அணை ஒன்னும் விலங்கோ, மனிதனோ இல்லை. அணையின் பலத்தை பொறுத்து எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தாக்குப்பிடிக்கும். 125 ஆண்டுகள் கழிந்த எத்தனையோ ஆண்டுகள் இந்தியாவில் இன்னும் இருக்கின்றன. அதை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பிரித்திவிராஜ் கூறுகிறார் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பிரிதிவிராஜன் இந்த கருத்துக்கு தமிழகத்தில் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அவருடைய புகைப்படத்தை எரித்தும், அவருக்கு எதிராக கோஷமிட்டும் வருகின்றது சில அமைப்புகள். இவர்களோடு அரசியல் கட்சிகள், தனி நபர்கள் என பல தரப்பிலிருந்தும் பிரித்திவிராஜ் மீது தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் இந்த பிரச்சனை பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கரண்டை விட பயங்கர ஹை வோல்டேஜ் கொண்டது முல்லை, காவேரி பிரச்சினை. இதைத் தொட்டால் சும்மா விடுமா? இதில் தற்போது பிரித்திவிராஜ் கை வைத்துள்ளார். என்ன ஆகுவார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Advertisement
Advertisement