என் அப்பா இறுதி சடங்கு போது கைதட்டி சிரிச்சாங்க, உடைஞ்சி போயிட்டேன் - வேதனையில் பிரித்விராஜ் பகிர்ந்த தகவல்
தன்னுடைய தந்தையின் இறப்பின் போது நடந்த சம்பவம் தொடர்பாக நடிகர் பிரித்விராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவருடைய தந்தை சுகுமாரன். இவரும் மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஆவார். அதேபோல் தாயார் மல்லிகா சுகுமாரனும் பிரபலமான நடிகை. இவருக்கு இந்திரஜித் சுகுமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவரும் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர்களுடைய இரண்டாவது மகன் தான் பிரித்விராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் இவர் மலையாள மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் ஆடு ஜீவிதம்.
பிரித்விராஜ் திரைப்பயணம்:
இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்தும் இவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
எம்புரான் படம்:
தற்போது பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்2; எம்புரான். இந்த படத்தினுடைய முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ், சானியா ஐயப்பன், கிஷோர், சாய்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
பிரித்விராஜ் பேட்டி:
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் பிரித்விராஜ் தன்னுடைய தந்தை குறித்து கூறியிருந்தது, நானும் எல்லா குழந்தைகள் போல சாதாரணமாகத்தான் வளர்ந்தேன். என்னுடைய குழந்தைப் பருவம் ரொம்ப அழகாக இருந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் என்னுடைய பெற்றோருக்கு தான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒரு பிரபலம் இறந்து போனால் அந்த பிரபலத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்த
அவரது உடலை பொதுவெளியில் வைப்பார்கள். அது எனக்கு சுத்தமாகவே பிடிக்காது. காரணம், அங்கு அவருடைய குடும்பமே மிகப்பெரிய இழப்பில் இருக்கும். அப்போது அங்கு வேறு யாராவது ஒரு பிரபலம் வந்தால் ரசிகர்கள் அவரை கொண்டாடும் விதமாக கைதட்டி சிரித்து கத்துவார்கள்.
https://www.youtube.com/watch?v=A_jmCYGjZmY
தந்தை இறப்பு:
அதேபோல் என்னுடைய அப்பா இறந்தபோதும் அந்த சம்பவம் நடந்தது. மோகன்லால் வந்தபோது அவருடைய ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறோம் என்று கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது என்னுடைய அப்பா இறந்திருந்தார். இந்த இடத்தில் இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற எண்ணம் வந்தது. உண்மையிலேயே அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. சின்ன வயதிலிருந்து எனக்கு பெரிதாக அழவே வராது. ஆனால், என்னால் கேமரா முன்னால் அழ முடியும். என்னைப் போன்ற குணம் கொண்டவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். உண்மையில் அது போன்ற நேரங்களில் சோகத்தை வெளிக்காட்ட அழுது விட வேண்டும். அதுதான் நல்லது என்று கூறியிருக்கிறார்.