தனுஷ் மீதான சர்ச்சைக்கு இது தான் காரணம், நடிகர் ராதாரவி கொடுத்த விளக்கம்- வைரலாகும் வீடியோ
தனுஷ் மீதான சர்ச்சைக்கு நடிகர் ராதா ரவி கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தினர் கொடுத்திருக்கும் புகார் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்திருந்த 50வது திரைப்படம் ராயன். இந்த படத்தில் துஷாரா, காளிதாஸ், சந்தீப் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தனுஷின் மீது தயாரிப்பாளர் சங்கத்தினர் புகார் கொடுத்திருந்தார்கள். அதில், நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் இருந்து முன் பணம் வாங்கி படங்களில் நடிக்காமல் காலதாமதம் செய்கிறார்.
தனுஷ் மீது புகார் :
இதனால் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்கள் உடைய பணிகள் துவங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும். அவருக்கு ரெட் கார்ட் விடுக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கூறியிருந்தார்கள். இது தொடர்பாக நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி பேட்டியில், தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தோ, நடிகர் சங்கத்தின் தரப்பில் இருந்தோ பிரச்சனைகள் எழுந்தால் அதனை குழுக்கள் அமைத்து தீர்த்து வைப்போம்.
ராதாரவி பேட்டி :
இந்த முறையில் தயாரிப்பாளர் சங்கத்தினர் தனியாகவே முடிவெடுத்திருக்கிறார்கள். தனுஷ் மீதான புகார் என்பது எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக வரவில்லை. இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதை அடுத்து பலருமே தனுஷ் விவகாரம் குறித்து கருத்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ராதா ரவி, நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் பிரச்சனை இன்று, நாளை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். இது இப்போதைக்கு தீரப் போவதில்லை.
தனுஷின் மறு பக்கத்தை போட்டு உடைத்த நடிகர் ராதா ரவி.. "எல்லாரும் பிரஷர் பண்றதுக்கு இது தான் காரணம்" https://t.co/CJdPGhJPBz#dhanush #radharavi #thanthitv
— Thanthi TV (@ThanthiTV) August 10, 2024
தயாரிப்பாளர் சங்கம் குறித்து சொன்னது :
கேப்டன் விஜயகாந்த் இருந்தவரை சங்கத்தில் எந்த ஒரு பிரச்சினையும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் சுமூகமாக முடித்து விடுவார். ஆனால், இப்போது நடக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லை மீறி போகிறது. நடிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு அந்த கோபத்தை யார் மீது காண்பிப்பது என்று தெரியாமல் தற்போது தனுஷ் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். தனுஷ் ஒரு நல்ல மனிதர். அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. அனைவருக்குமே உதவி செய்யக் கூடியவர்.
தனுஷ் குறித்து சொன்னது :
அவர் இப்போது ஒரு படம் இயக்கி, நடித்து நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இதனால் தான் எல்லோருமே அவர்மீது அழுத்தம் கொடுக்கக்கூடாது. நமக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்காமல் போய்விடும். அவரும் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதை மறந்து விடாதீர்கள். விரைவில் அனைத்து சங்கங்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்சனை தீர்ப்போம். எந்த சினிமாவையும் நிறுத்தி வைக்க முடியாது. எல்லோரும் படம் பண்ண வேண்டும். விஷாலை பற்றி திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் அவர் ஏதாவது செய்து கொண்டுதான் வருகிறார். இப்போது என்னை நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நான் எங்கே போவது? எனக்கு கேமரா முன்பு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று பேசி இருக்கிறார்.