ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து உள்ள ரகுவரன் மகன்- எப்படி இருக்காரு தெரியுமா?

By Ajju · 20/7/2024

நடிகர் ரகுவரன் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் பெரும்பாலான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் ரகுவரன் ரோகிணி ஒருவர். 80ஸ் காலகட்டம் தொடங்கி 2000 காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.

நைன்ட்டீஸ் ரசிகர்களுக்கு ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமாக இருந்தார் ரகுவரன். இவர் முதன் முதலில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் 'ஏழாவது மனிதன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் அதன் பின் வில்லனாக நடித்தார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்து போனது.

ரகுவரன் திரைப்பயணம்:

மேலும், 90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார். இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், அஜித்,விஜய் என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.

ரகுவரன் – ரோகினி :

நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன் பின் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார்.

ரகுவரன் இறப்பு:

பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரகுவரன் இறந்தார். இவரது மரணத்திற்கு காரணம், அதிக குடிப்பழக்கம், தன்னுடைய மகனை பிரிந்த மன அழுத்தம் தான் என்று கூறப்பட்டது. ரகுவரன் தன் மகன் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். இந்த நிலையில் மறைந்த நடிகர் ரகுவரன் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிஷி உயரம், தோரணை, ஜாடை என்று அப்படியே தந்தை ரகுவரனை உரித்து வைத்திருக்கிறார். தற்போது இவருக்கு 25 வயதாகிறது. இவர் இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ரகுவரன் மகன் லேட்டஸ்ட் புகைப்படம்:

அதுமட்டுமில்லாமல் ஆங்கில மொழியில் இவர் ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய தந்தை பெயரில் இவர் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ரகுவரனுக்கு சினிமாவின் நுழைந்த ஆரம்ப காலத்தில் இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் காலத்தின் மாற்றத்தால் அவர் நடிப்பு தேர்வு செய்திருந்தார். அவருடைய மகன் ரிஷி தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்றி வருகிறார். இதைப் பார்த்து பலருமே அப்பாவைப் போலவே மகனும் இருக்கிறார் என்று கமெண்ட்டுகளை போட்டு புகைப்படத்திற்கு லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full