நடிகர் ரகுமானின் மகள் கார் வாங்கி தர கேட்டதற்கு ரகுமான் தேர்வு வைத்திருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் நடிகர்களை யாரும் மறந்து இருக்க மாட்டோம். அதிலும் ஒரு சில 90ஸ் நடிகர்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ரகுமான். 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நிலவே மலரே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . ஆனால், நடிகர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார்.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தான். ரகுமானின் முழுப்பெயர் ரஷின் ரகுமான். இவர் 1967ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர். ஆனால் இவருடைய மூதாதையர் குடும்பம் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர்கள். இவர் 1983 ஆம் ஆண்டு ‘கூடவிடே’ என்ற மலையாள படதின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தற்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருதினை ரகுமான் பெற்றார். அதன் பின்னர் இவர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார்.

Advertisement

ரகுமான் திரைப்பயணம்:

பிறகு ரகுமான் அவர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழில் இவர் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், சங்கமம்ம் வாமனன், பில்லா-2, துருவங்கள் பதினாறு என அன்றிலிருந்து இன்று வரை பல ஹிட் படங்களில் நடித்தார் ரகுமான். இதனிடையே ரகுமான் அவர்கள் மெகருநிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் தங்கை தான் இந்த மெகருநிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுமான் மகள்கள்:

மேலும், இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ருஷ்டா, இரண்டாம் மகள் அலிஷா ஆவார். மேலும், கடந்த ஆண்டு தான் நடிகர் ரகுமானின் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாஃப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக முதலவர் M.K.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் ரகுமானின் மகள் கார் கேட்டதற்கு ரகுமான் தேர்வு வைத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் ரகுமானின் இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

Advertisement

மகளுக்கு ரகுமான் வைத்த தேர்வு:

தற்போது அவருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கிறது. மேலும், இவர் கார் ஓட்ட லைசன்ஸ் பெற தனது தந்தையிடம் சொந்த கார் வாங்கி தர வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால், நடிகர் ரகுமான் அவர்கள் கார் பற்றி அவரிடம் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார். பின் தனி ஆளாக யார் உதவியும் இன்றியும் கார் டயரை கழற்றி வேறு டயரை மாற்ற முடிந்தால் கார் வாங்கி தருகிறேன் என்று ரகுமான் கூறி இருக்கிறார். அதன்படி ரகுமானின் மகளும் டயர் கழட்டி மாட்டி இருக்கிறார். இதனை ரகுமான் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement

ரகுமான் பதிவிட்ட பதிவு:

பின் இது குறித்து அவர் கூறியிருப்பது, குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பது ஒரு தந்தையின் கடமை. ஆனால், அதற்கு அவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிந்தே செய்ய வேண்டும். கார் ஓட்ட மட்டும் தெரிந்தால் போதாது. காரின் அடிப்படை மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகவே நான் என் மகளுக்கு தேர்வு வைத்தேன் என்று ரகுமான் கூறி இருக்கிறார். இருப்பினும் தனது மகள் கார் டயரை சரியாக மாட்டவில்லை என்பதாலும், அவருக்கு பரீட்சை வருவதாலும் கடவுள் புண்ணியத்தில் தான் கார் வாங்க செலவு செய்ய தேவை ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisement