என் அண்ணாவுக்கு சித்த மருத்துவர் எந்த மருந்தும் கொடுக்கவில்லை - நடிகர் ராஜேஷ் தம்பி கொடுத்த விளக்கம்

By subhashini · 31/5/2025

நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு பற்றிய சர்ச்சைகள அவர் தம்பி சத்யன் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவர் முதன்முதலில் பள்ளி ஆசிரியராகத்தான் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் 70,80 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர். இவர் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலுமே நடித்திருக்கிறார். இவர் நடிகர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருந்தார். கடைசியாக இவர் 2024 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் உடல்நல குறைவால் அவஸ்த்தை பட்டிருந்தார். சில தினங்களுக்கு முன் காலை உடல்நிலை குறைவால் நடிகர் ராஜேஷ் காலமாகி இருந்தார். இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ராஜேஷ் மறைவு:

ராஜேஷ் உடைய உடல் சென்னை ராமபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து அவருடைய மகள் வந்ததுமே அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. மேலும், ராஜேஷின் மறைவு குறித்து அவருடைய தம்பி அளித்த பேட்டியில், என்னுடைய அண்ணன் ராஜேஷ் இறக்கும் அன்று அதிகாலையில் எழுந்துவிட்டார். நாங்கள் அவருடைய பக்கத்தில் இருந்திருந்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்போம். அவருக்கு எதுவுமே ஆகியிருக்காது. சித்த மருத்துவர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒருவர் அவரிடம் கதை பேசிக்கொண்டு இரண்டு மணி நேரத்தை இழுத்து அடித்துவிட்டார்.

https://www.youtube.com/watch?v=1e6Lw2PbMQA

ராஜேஷ் தம்பி பேட்டி:

6 மணிக்கு வந்தவர் எட்டு மணி வரை பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் அண்ணனுக்கு உடம்பு இன்னும் முடியாமல் போனது. நாங்கள் தாமதித்துப் போனதுதான் பெரிய தவறாகிவிட்டது. அவர் விஷயத்தாரி என்பதால் நாங்களும் கவனிக்காமல் விட்டோம். அது எங்களுடைய தவறுதான். அவருடைய அலட்சிய போக்கு தான் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் இதுபோன்று எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெஞ்சு வலிக்கிறது என்று அவர் சொல்லவே இல்லை. இரவு முழுவதும் தூக்கமில்லை. மூச்சு விடுவதில் ரொம்பவே சிரமமாக இருப்பதாக சொன்னார். அதனால் உடனே மருத்துவமனைக்கு போகலாம் என்று சொன்னார்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

சித்த மருத்துவர் சர்ச்சை:

நம்மிடம் தான் எல்லா கருவிகளுமே இருக்கிறது என்று சொல்லி அவரே பல்ஸ் பார்த்தார். நன்றாக தான் இருந்தார். மருத்துவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து பார்க்க செய்யலாம் என்பதற்காக அவரை அழைக்க நான் போனேன். ஆனால், பாதி வழியிலேயே நான் சென்று கொண்டிருக்கும் போது என்னுடைய அண்ணன் மகன் போன் செய்து, அப்பா நன்றாக இருக்கிறார் என்று சொன்னார். அதனால்தான் நானும் திரும்பி வந்துவிட்டேன். அதுதான் மிகப்பெரிய தவறாகி விட்டது. மருத்துவர் வந்திருந்தால் அவருடைய உடல் நிலையின் உடைய பிரச்சனை தீவிரம் புரிந்திருக்கும். நாங்கள் அதற்கு பிறகு தான் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றோம். பாதி வழியிலேயே இறந்துவிட்டார் என்று எமோஷனலாக கூறியிருந்தார்.

சத்யன் விளக்கம்:

இப்படி நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் சொன்னது சோசியல் மீடியாவில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இதற்கு ராஜேஷின் சகோதரர் சத்யன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய அண்ணாவிற்கு சித்த மருத்துவர் எந்த மருந்துமே கொடுக்கவில்லை. என்னுடைய அண்ணாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னது சித்த மருத்துவர் தான். வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full