40 வயதிலேயே தனக்கான கல்லறையை காட்டிய நடிகர் ராஜேஷ் - பின்னால் இப்படி ஒரு ரகசியம்
நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு முன்பே தனக்கு தானே கல்லறை கட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவர் முதன்முதலில் பள்ளி ஆசிரியராகத்தான் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் 70,80 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர். இவர் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்து இருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலுமே நடித்திருக்கிறார். இவர் நடிகர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருந்தார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2024 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ராஜேஷ் குறித்த தகவல்:
சமீப காலமாக இவர் youtube சேனலை தொடங்கி அதில் ஆரோக்கியம் மற்றும் ஜோதிடம் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் உடல்நல குறைவால் அவஸ்த்தை பட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை உடல்நிலை குறைவால் நடிகர் ராஜேஷ் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு இடையே இவர் ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருடைய மனைவியும் உடல்நிலை குறைவால் 2012 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
https://www.youtube.com/watch?v=i5mIe0rhZyE
ராஜேஷ் இறப்பு:
இவர்களுக்கு திவ்யா, தீபக் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தற்போது ராஜேஷ் உடைய உடல் சென்னை ராமபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அவருடைய மகள் வந்ததுமே அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இறப்பதற்கு முன்பு நடிகர் ராஜேஷ் தனக்கு கல்லறை கட்டியிருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேட்டியில் ராஜேஷ், ஓரு முறை நான் லண்டன் சென்றிருந்தேன். அப்போது காரல் மார்க்ஸ் கல்லறையை பார்த்தேன். அந்த கல்லறை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த கல்லறையில் நின்று நான் ஒரு போட்டோவும் எடுத்துக் கொண்டேன்.
https://www.youtube.com/watch?v=1n65dOoz-j0
ராஜேஷ் பேட்டி:
அந்த கல்லறை அவர்களுடைய குடும்பத்தினர் அடுத்தடுத்து அடக்கம் செய்யுமாறு அறைகள் இருக்கும்.
ஒருவருடைய உடல் கீழே போனதுமே அடுத்தவருடைய உடல் மேலே வைப்பது போல இருக்கும். அதுபோன்ற நானுமே மார்பிள் வைத்து ஒரு கல்லறை கட்டியிருந்தேன். அதற்கு அடுத்த ஆறு மாதத்திலேயே என்னுடைய
அம்மா இறந்து விட்டார். அதற்குப் பிறகு என்னுடைய அப்பா, அடுத்ததாக என்னுடைய மனைவி இறந்து விட்டார்கள். அவர்கள் எல்லோரையும் அந்த கல்லறையில் தான் அடக்கம் செய்திருக்கிறேன். இப்போது எனக்காகவும் அந்த கல்லறையில் ஒரு இடம் இருக்கிறது. நான் 40 வயதிலேயே என்னுடைய கல்லறையை கட்டி விட்டேன்.
கல்லறை பற்றி சொன்னது:
தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டவன் 100 வயது வரை இருப்பான் என்று சொல்வார்கள். நான் நூறு வயது வரை இருக்க வேண்டும் என்று கட்டவில்லை. என்னுடைய கல்லறை எப்படி இருக்க வேண்டும்? அதில் என்ன எழுதி இருக்க வேண்டும் முதற்கொண்டு நான் கட்டி இருக்கிறேன். அதோட முதலில் நான் மார்பில் கல்லறை கட்டியிருந்தேன். அது இடிந்ததனால் புதுப்பித்து வேறொரு கல்லறையும் கட்டி இருக்கிறேன்
என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.