அவர் குரலைக் கேட்ட உடனே தெம்பு வந்தது, யாரும் எதிர்பார்க்காத தொகை - நெகிழ்ச்சியில் ரஜினி பற்றி ராதா கண்ணன் சொன்னது

By subhashini · 19/3/2025

ரஜினி செய்த உதவி குறித்து ராதா கண்ணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருப்பவர் ராதாகண்ணன். இவர் நடிகர், நடிகைகள் பல பேருக்கு தனிப்பட்ட முறையில் மேனேஜராக இருந்திருக்கிறார். அதோட இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் கூட செய்தி தொடர்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இப்படி இருக்கும் போது சில ஆண்டுகளாகவே இவர் சிறுநீரக பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்திருந்தார். பின் சில தினங்களுக்கு முன்பு தான் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய உடல் நலன் குறித்து ரஜினிகாந்த் போனில் அழைத்து விசாரித்து இருக்கிறார்.

ராதா கண்ணன் குறித்த தகவல்:

சிகிச்சைக்குப் பிறகு தற்போது ராதா கண்ணன் வீடு திரும்பிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த பேட்டியில், எனக்கு சிறுநீரக பிரச்சனை ரொம்ப வருஷமாகவே இருக்கிறது. ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதில் இருந்து பல லட்சங்கள் செலவாகிவிட்டது. நான் மருத்துவமனையில் சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பது என்னுடைய நண்பர்கள் சிலர் ரஜினி சார் இடம் தெரிவித்திருக்கிறார்கள்.

ராதா கண்ணன் பேட்டி:

மறைந்த ஜி.வி.சாரிடம் ரொம்ப வருஷம் ஆக நான் வேலை பார்த்தேன். அந்த தொடர்பில் தான் தளபதி படத்தில் பல நாட்கள் பணியாற்றியிருந்தேன். அதன் மூலம் தான் ரஜினி சாரோட அறிமுகம் கிடைத்தது. பின் உழைப்பாளி பட சூட்டிங் நேரத்தில் தான் ரஜினி சாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன். அவர் மட்டும் இல்லாமல் பல நடிகர்களுக்கு நான் மேனேஜராகவும் இருந்தேன். என்னுடைய நண்பர்கள் மூலமாக உடல் நலத்தை பற்றி கேள்விப்பட்டதுமே தன்னுடைய உதவியாளர் மூலம் என்னிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ரஜினி பற்றி சொன்னது:

ரஜினி சார் வீட்டில் இருந்து சுப்பையா அழைத்து தலைவர் பேசுகிறார் என்று சொல்லிக் கொடுத்தார். என்ன ராதா கண்ணன், என்ன பிரச்சனை என்று அவர் கேட்டார். அவருடைய குரலை கேட்டதுமே நாலு நாள் ஆக இருந்த சோர்வெல்லாம் காணாமல் போய்விட்டது. இருந்தாலும் என்னால் சரியாக பேச முடியவில்லை. பின் என்னுடைய மகனிடம் கொடுத்து பேசினேன். என் மகன், என்னுடைய நிலையை பற்றி சொல்லி இருந்தார். உடனே அவர், தம்பி நீ நாளைக்கு காலையில் 10:00 மணிக்கு கல்யாண மண்டபம் வந்துவிடு என்று சொல்லி இருக்கிறார்.

ரஜினி செய்த உதவி:

என்னுடைய மகனுமே கல்யாண மண்டபத்துக்கு போனான். நாங்கள் எதிர்பார்க்காத ஒரு தொகையை கொடுத்தார். பின் அன்று மாலை நான் டிசார்ஜ் ஆகிவிட்டேன். எப்பவோ பழகின பழக்கத்திற்காக என்னை மறக்காமல் தொடர்பு கொண்டு பேசினது மட்டுமில்லாமல் பண உதவியும் செய்து இருக்கிறார். அவருடைய குரலைக் கேட்ட உடனே எனக்கு தெம்பு வந்துவிட்டது. எனக்கு இருக்கிற பிரச்சனைகள் இருந்து நான் சீக்கிரமாகவே மீண்டு வந்து அவரை நேரில் போய் பார்க்கணும். அவரிடம் நன்றியை சொல்லணும் என்று நெகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full