நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுனத்துக்கு இது தான் முக்கிய காரணம் - ரஜினிகாந்த் ஓபன் டாக்
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமாக இருந்தவர் ஆர்.எம் வீரப்பன். இவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஆர்.எம்.வீ தி கிங் மேக்கர் (RMV The King Maker) என்ற ஆவணப்படம் தொடர்பாக வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ காட்சிகளில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம் வீரப்பனை பற்றிய பல நினைவுகளை பகிர்ந்து பேசுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=y28uHpiFwQQ
அதில் பேசிய ரஜினிகாந்த், அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம் வீரப்பன் பற்றி பேசுவதை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் பாலச்சந்திரன், நடிகர் சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம். வீரப்பன் ஆகியோர் என் மீது ரொம்ப அன்பு வைத்தவர்கள். இவர்கள் இப்போது இல்லை என்றாலும் அவர்களை நான் அதிகமாக மிஸ் செய்கிறேன். பாட்ஷா திரைப்பட நூறாவது விழா நடைபெற்றிருந்தது.
ரஜினி சொன்னது:
அந்த மேடையில் அமைச்சர் ஆர் எம் வீரப்பனை வைத்துக் கொண்டே நான் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து பேசிவிட்டேன். அப்போது அவர் அமைச்சராக இருந்தார். அவரை வைத்து கொண்டு நான் அப்படி பேசி இருக்க கூடாது. அப்போது இருந்த காலகட்டத்தில் எனக்கு அந்த அளவிற்கு தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன். இதனால் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் இதை பார்த்துவிட்டு, எப்படி நீங்கள் மேடையில் இருக்கும் போதே ரஜினி வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி அரசுக்கு எதிராக பேசியிருப்பார்.
ஜெயலலிதா செய்த வேலை:
அவர் பேசியதை கேட்டு நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்று கோபப்பட்டு அவரை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டார். இது தெரிந்த உடன் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இதை நினைத்து நினைத்து நான் அன்று இரவு முழுவதுமே தூங்கவில்லை. பின் ஆர்.எம் வீரப்பனை தொடர்பு கொண்டு பேசும் போது மன்னிப்பு கேட்டு என் வருத்தத்தைதெரிவித்தேன். ஆனால், அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
#Thalaivar video byte for Late RM Verappan ayya . #Baasha producer and Ex minister
— Suresh balaji (@surbalutwt) April 9, 2025
He shares about Baasha 100th day function which #SuperstarRajinikanth spoke against late Jayalalitha which resulted of sacking him from ministry .” #Rajinikanth | #Superstar @rajinikanth |… pic.twitter.com/nWFPgpGPSB
ஜெயலலிதா பற்றி சொன்னது:
மேலும், மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக நான் குரல் கொடுத்திருக்கிறேன். அதற்கு சில காரணங்கள் இருந்தாலும் இதுதான் முக்கிய காரணம். அதற்கு பிறகு ஆர்.எம் வீரப்பனிடம் நான், ஜெயலலிதாவிடம் பேசுகிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர் ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார். அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். நீங்கள் சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்துவிட்டார். அதனால் தான் அவர் ரியல் கிங் மேக்கர் என்று கூறியிருக்கிறார்.
ரஜினி திரைப்பயணம்:
தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல்வேறு படங்கள் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிக்கும் ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.