டோபி, கழுதை - வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி

By subhashini · 21/9/2024

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெற்றியை கண்டது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த லால் சலாம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது இவர் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் வேட்டையன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

வேட்டையன் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் வேட்டையன் படக் குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் ரஜினி திரை உலகில் நுழைந்து 50 ஆவது ஆண்டை நிறைவு செய்த வகையில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவருக்கு நினைவு பரிசை வழங்கி இருந்தார்.

இசை வெளியீட்டு விழா:

பொதுவாகவே நிகழ்ச்சியில் ரஜினி சொல்லும் கதையை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் வேட்டையின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, இந்த படத்தோட இயக்குனர் என்னிடம் ஆறிலிருந்து அறுபது வரை படம் மாதிரி ஒரு ரஜினியை இந்த படத்தில் பார்க்கணும்னு சொன்னார். அதற்கு நான் ஹிமாச்சல நடந்த ஒரு உண்மையான கதையை அவரிடம் சொன்னேன். அந்த ஊரில் ஒரு டோபி இருந்தார். அந்த ஊரில் இருக்கிற ஒரு குளத்தை கடக்க ஒரு கழுதையைத்தான் பயன்படுத்துவார். ஒருநாள் அந்த கழுதை காணாமல் போனது.

ரஜினி சொன்ன கதை:

அந்த அதிர்ச்சியில் அந்த டோபி எல்லாத்தையுமே மறந்து விட்டார். அப்போ எல்லோரும் சேர்ந்து அவருக்கு காவி உடை உடுத்தி அவரை சாமியார் ஆக்கிட்டாங்க. ஒரு நாள் அந்த கழுதை திரும்ப வந்தது. மறுபடியும் அவனுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்தது. அப்போ எல்லோருமே அந்த டோபி கிட்ட இதையே நம்ம பார்த்துக்கலாம். இந்த வாழ்க்கை நல்லா இருக்கு என்று சொல்றாங்க. அந்த மாதிரி தான் அந்த படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜ் நீங்க பார்க்கவில்லை என்றேன். ஒரு படத்தில் எஸ் பி சார் எனக்கு முதல் நாளே 14 பக்கத்துக்கு வசனம் கொடுத்தார். நான் பேசமாட்டேன் என்று போய்விட்டேன்.

படம் குறித்து சொன்னது:

எல்லோருமே என்னை, திமிரு புடிச்சவன் போகட்டும் விடுங்க என்று சொன்னாங்க. பின் எஸ்பி சார் என்னை கூப்பிட்டு உன்னால முடிந்ததை பண்ணு என்று பேக் ஷாட், டாப் ஆங்கிள் வைத்து எடுக்கிறோம் என்றார். கமலுக்கு ஸ்ரீதேவி மாதிரி ஹீரோயின்கள் கூட நடிக்க வைத்தார்கள். அப்போ எனக்கு டிராமா நடிகர்களுடன் நடிக்க வைத்தார்கள். அப்படி வெள்ளை தாடி வச்சு ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு ஒரு நல்ல ட்ராக்கில் தான் போய்க்கொண்டிருந்தது. சினிமாவில் 50 வருஷமாக இருக்கிறேன். ஒண்ணுமே தெரியாமல் ட்ரெயின் ஏறி இங்கு வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவால் தான் இங்கு இருக்கேன். இந்த படம் ஞானவேலுக்காக ஹிட் ஆகணும், அவர் நம்ம சினிமாவுக்கு தேவை என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full