நான் ரொம்ப கண்டிப்பான அப்பா, ஆனால் என் மனைவி - நடிகர் ராம் சரண் எக்ஸ்குளுசிவ்

By subhashini · 15/4/2026

தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பிறந்தது.

இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு தான் அழகான பெண் குழந்தை பிறந்து. பின் கடந்த ஆண்டு இறுதியில் தான் ராம்சரணின் மனைவி உபாசனா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோடு இவர் இரட்டை குழந்தைக்கு தாயாகி இருப்பதாக கூறியிருந்தார்கள். மேலும், சில மாதங்களுக்கு முன் ராம்சரண்- உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. ஒரு பெண், ஒரு ஆண். பிறந்திருக்கிறது.பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

ராம்சரண் குடும்பம்:

இப்படி இருக்கும் நிலையில் ராம்சரண் அளித்த பேட்டியில், வீட்டில் நான் ஒரு கண்டிப்பான அப்பா. குழந்தைகளை குதிக்கவும், மண்ணில் விளையாடவும், உயரமான இடங்களில் ஏறவும், சவாலான விஷயங்களை எதிர் கொள்ளவும் நான் அனுமதிப்பேன். அவர்களுடைய தாய் அவர்களை ரொம்பவே அரவணைத்து பார்த்துக் கொள்வார். ஆனால், தைரியம் தேவைப்படும் போது அவர்கள் என்னிடம் தான் வருவார்கள். குழந்தைகள் சுதந்திரமாக வளர வேண்டும்.

ராம்சரண் பேட்டி:

அவர்கள் சுயமாக உலகை சுற்றி பார்த்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன். அவர்கள் தான் என் உலகம். அவர்கள் வீட்டில் இல்லாத போது அந்த இடமே வெறுமையாக இருக்கும். என் குடும்பம் தான் எனக்கு எல்லாமே. என்னுடைய பெற்றோரை பார்த்து தான் இதை நான் கற்றுக் கொண்டேன். மிகப்பெரிய பாடம் குடும்பத்திற்காக எப்போதும் உடன் இருக்க வேண்டும். எவ்வளவு வேலை இருந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் நான் சோம்பேறியாக இருக்க மாட்டேன்.

View this post on Instagram

A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)

குடும்பம் பற்றி சொன்னது:

என்னுடைய செல்லப்பிராணிகள், குடும்பத்தினர் எல்லோரிடமும் சேர்ந்து இருப்பேன். என்னுடைய உலகம் ரொம்பவே சிறியது. அதை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். முன்பு எனக்கு மூன்று குழந்தைகள் இல்லை. பெரிய பொறுப்புகளும் இல்லை. அப்போது என்னுடைய வேலை, படபிடிப்பு மட்டும்தான் கவனத்தில் இருந்தது. இப்போது எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். படபிடிப்பு முடிந்ததும் என்னுடைய குழந்தை, மனைவி என ஒவ்வொருவருக்கும் முழுமையாக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full