மீண்டும் சேர்ந்து வாழ நினைக்கும் நடிகை நளினி? கோபத்தில் ராமராஜன் சொன்ன விஷயம்

By subhashini · 8/4/2025

தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகர் ராமராஜன் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த போது இவர் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.

இவர் 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

ராமராஜன் குறித்த தகவல்:

இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. பின் ராமராஜன் அரசியலில் குதித்தார். இவர் இதுவரை ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்திருந்தார். இவர் இடையில் 2012 ஆம் ஆண்டு மேடை என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ராமராஜன் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கிறார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் அவர்கள் சாமானியன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்கி இருந்தார்.

ராமராஜன்-நளினி திருமணம்:

இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். இதனிடையே இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராமராஜனை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த ராமராஜன் நளினியை காதலித்தார். ஆரம்பத்தில் இவருடைய காதலுக்கு நளினி ஓகே சொல்லவில்லை என்றாலும் அதற்குப் பிறகு சம்மதித்தார்.

ராமராஜன்-நளினி பிரிவு:

மேலும், நளினி- ராமராஜன் காதலுக்கு நளினியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு கட்டத்தில் பல எதிர்ப்புகளுக்கு மீதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது நளினி அம்மா சாபமிட்டு, நீ தனியா தான் நிற்பாய் என்றெல்லாம் பேசியிருந்தார். அவருடைய சாபம் பலித்தது என்னவோ, 13 ஆண்டுகள் தான் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை நீடித்தது. அதற்கு பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். இருவருக்குமே திருமணம் ஆகி விட்டது.

ராமராஜன் பேட்டி:

இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களாக ராமராஜன்- நளினியும் குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழ முயற்சி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ராமராஜன், நாங்கள் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ்வது என்பது நடக்காத விஷயம். இல்லாத ஒரு விஷயத்தை இப்படி பேசுவதில் யாருக்கு ஆனந்தம்? நாங்கள் பிரிந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இது போன்ற வதந்திகளால் சம்பந்தப்பட்ட இருவருடைய மனமும் புண்படும் என்று தெரியாதா? இந்த தகவல் வெளியானதிலிருந்து பலருமே என்னிடம் போன் பண்ணி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் நளினிக்கும் இடையே எல்லாமே முடிந்து விட்டது. முடிந்தது முடிந்தது தான். இதனால் எங்களை பற்றிய செய்திகளை பரப்ப வேண்டாம். இதனை இப்படியே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் என் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full