முதலில் விஜய் பெண்களுக்கு பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் - நடிகர் ராமராஜன் சொன்ன விஷயம்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள். அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார்.
மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். நேற்று தேர்தலின் முடிவுகள் வெளியானது. 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருக்கிறது.
விஜய் அரசியல்:
இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் ஒரு தனி மனிதன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று எல்லோருமே பாராட்டி வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் கொளத்தூர் தொகுதியில் நின்ற ஸ்டாலினையும் தவெக வேட்பாளர் பாபு தோற்கடித்திருக்கிறார். இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகரும் தவெகவிற்கு ஆலங்குளம் தொகுதியில் பிரச்சாரம் செய்தவருமான இராமராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தவெக வெற்றி:
அதில் அவர், நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திரைத்துறையில் இருந்து வந்து குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி, முதன்முதலாக தேர்தலை சந்தித்து அதில் மக்களின் ஏகோபித்த பேராதரவைப்பெற்று தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் என் துறை சார்ந்த இனிய சகோதரர், தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமராஜன் வாழ்த்து:
மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரித்தாக நல்லதொரு மக்களாட்சியை நிகழ்த்தி சாதி-மத வேறுபாடற்ற , லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தையும், அனைவருக்கும் பாதுகாப்பான அரசாகவும், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம், போன்றவற்றை அறவே இல்லாமல் ஒழித்து, அனைத்து துறைகளிலும் பெண்கள் தைரியமாக சென்று வென்று வரக்கூடிய பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தி, படித்தோருக்கு உரிய வேலைவாய்ப்பினை உருவாக்கி எல்லா தரப்பு மக்களும் பயன் தரும் வாழும் மாநிலம் " தமிழகம்" என்ற நிலைக்கேற்ப சிறந்ததொரு புதிய யுக்தி ஆற்றலை கையிலெடுத்து புரட்சி கரமான ஆட்சி செய்திட இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துக்கள் என்கிறார்.