பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி படத்துல நடிக்கும் போதெல்லாம் நான் சாதி வெறியனா தெரியலையா? ரஞ்சித் கேள்வி

By subhashini · 9/7/2024

'நாடக காதல்' படம் தொடர்பாக தன்மீது எழுந்த விமர்சனத்திற்கு நடிகர் ரஞ்சித் கொடுத்திருக்கும் பதிலடி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரஞ்சித். இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.

இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார். சிறிய இடைவெளிக்கு பின் தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’.

குழந்தை C/O கவுண்டம் பாளையம்:

நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. பின் இந்த படத்தினுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்கள் தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.

படம் குறித்த சர்ச்சை:

இதைத் தொடர்ந்து ரஞ்சித்தை விமர்சித்து பேட்டி கொடுத்து இருந்தார்கள். அந்த வகையில் பேட்டியில், ரஞ்சித் சினிமாவில் ரீஎன்ட்ரி வேண்டும் என்று பெண்களை தப்பாக காண்பித்து படம் பண்ணியிருக்கிறார். ரஞ்சித் நாடகக் காதல் என்று சொல்கிறான். இவனே தான் நாடக காதல் செய்திருக்கிறான். தன்னை விட உயர் ஜாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து அதற்குப் பின் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

நடிகர் ரஞ்சித் பேட்டி:

சொல்லப் போனால் இவனுடைய கதையை தான் படமாக எடுத்திருக்கிறான் என்றெல்லாம் மோசமாக திட்டி பேசி இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஞ்சித், ஏன் மக்கள் என்னை தவறான நோக்கில் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் சினிமாவை சரியாக பார்க்கிறேன் ஆனால் அவர்கள் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். பாரதிகண்ணம்மா படத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு குரல் கொடுத்து பேசியிருந்தேன். அப்போது என்னை ஏற்றுக் கொண்டார்கள். அதே வேறு ஒரு படத்தில் என்னை ஜாதி வெறியனாக பார்த்தார்கள். நான் எப்போதும் காதலுக்கு எதிரானவன் கிடையாது.

https://www.youtube.com/watch?v=OkG1KfoGaQI

விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி:

நாடக காதலுக்கு தான் எதிரானவன். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பெற்றோருடைய சம்மதத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதேபோல் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்கள் எல்லாம் நான் பார்த்ததே கிடையாது. கேள்வி பட்டிருப்பதை தவிர அவர்களுடைய படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததே கிடையாது. நாடக காதல் படத்திற்காக சில விஷயங்களை செய்வதற்கு சில படங்களை பார்த்தேனே தவிர மற்றபடி வேறு யார் படமும் பார்க்கவில்லை என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full