இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் மயங்கி விழுந்த பெண், நடிகர் ரஞ்சித் செய்த செயல்- வைரலாகும் வீடியோ

By Arun · 17/7/2024

சாலையில் மயங்கி விழுந்த பெண்ணிற்கு நடிகர் ரஞ்சித் உதவி செய்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன் பாளையம் என்ற இடத்தில் கணவர் சுப்ரமணியுடன் இரு சக்கர வாகனத்தில் சித்ரா என்ற பெண் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பெண் சித்ரா மயங்கி சாலையில் விழுந்தார்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

அந்த சமயம் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி காரில் சென்றிருந்த நடிகர் ரஞ்சித் இந்த சம்பவத்தை பார்த்து இருக்கிறார். பின் அவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வரவைத்து மயங்கி விழுந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு நடிகர் ரஞ்சித்தின் செயலை பார்த்து பலருமே பாராட்டி வருகிறார்கள்.

ரஞ்சித் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் ரஞ்சித். இவர் பெரும்பாலும், படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தார். பின் இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். அதோடு இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.

ரஞ்சித் நடித்த சீரியல்கள்:

இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார்.

ரஞ்சித் நடித்த படம்:

தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’. நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி படம் இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. பின் இந்த படத்தினுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full