முதுகில் குத்துபவர்களை பற்றி கவலை கிடையாது, சுயமரியாதை முக்கியம் - நடிகர் ரவி மோகன் எமோஷனல்

By subhashini · 7/1/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது.

பராசக்தி படம்:

இந்த படத்தை ஜனவரி 10ஆம் தேதியே வெளியிட இருக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரவி மோகன், பலருடைய கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம் தான் பராசக்தி. இந்த வருடத்துடைய சிறந்த படமாக பராசக்தி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் சிவகார்த்திகேயன் தகுதியானவர். இன்னும் அவர் பெரிய பெரிய மேடைகள் எல்லாம் ஏற வேண்டும். அதற்கு ரசிகர்கள் நீங்கள் அவருடன் இருக்க வேண்டும்.

விழாவில் ரவி மோகன்:

பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள்.. அந்த மாதிரி தான் முதல்முறையாக ஒரு பெண் இருந்த இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று சுதா மேம் பார்த்துக் கொண்டார். இந்த தீயை அணைக்க நிறைய பேர் வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை. கடவுள் முன்பு இருக்கின்ற அகல் விளக்கு. பராசக்தியில் ஏன் வில்லனாக செய்கிறீர்கள் என்று நிறைய பேர் கேட்டார்கள். எனக்கு ரெண்டே காரணம் தான் இருந்தது. ஒன்று சுதா மேம், இன்னொன்னு கதை.

https://www.youtube.com/watch?v=83_8rJ-MyDU

வாழ்க்கை பற்றி சொன்னது:

இந்த படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றி தான் எனக்கு கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன். சுயமரியாதை மற்றும் இழக்கக்கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகில் வாழ முடியும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full