இனி நான் நடிக்க மாட்டேன், அந்த இட்லி நடிகைக்கு அருகதை இல்லை - கண் கலங்கி பேசிய ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. கோர்ட்டில் ரவிமோகன்- ஆர்த்தி உடைய விவாகரத்து கேஸ் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷா உடன் சேர்ந்து ஆன்மீகம், நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் பலருமே கெனிசாவின் நடத்தையை ரொம்ப மோசமாகவும் விமர்சித்தும் பேசுகிறார்கள். ஒரு கட்டத்தில் கெனிஷாவை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். பின் இது தொடர்பாக கெனிஷா வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் ரவி மோகன், இவ்வளவு நாள் நான் பேசாமல் இருந்ததை முட்டாள் தனம் என்று நினைக்கிறேன். நான் பேசாமல் இருந்த காரணம், நான் யாரையும் கேவலப்படுத்த கூடாது அசிங்கப்படுத்தக் கூடாது என்றுதான் அமைதியாக இருந்தேன். எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை என்னுடைய படம் திரையில் வெளியாகாது. நான் நடிக்கப் போவதில்லை. என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு நடந்த அவமானங்களையும் அசிங்கங்களையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவங்க எது வேணாலும் பண்ணலாம் நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? நானும் பெண் என்று தான் அமைதியாக இருந்தேன்.
ரவி மோகன்-ஆர்த்தி சர்ச்சை:
ஃபெமினிசம் என்றால் என்ன தெரியுமா? நான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பற்றி படம் எடுத்தவன். பெண்களுக்கு உரிமை கிடைக்கணும்னு பேசியவன். என்னுடைய அம்மா என்னை அப்படி வளர்க்கவில்லை. இந்த இரண்டு வருஷம் நான் அமைதியாக நிம்மதியாக இருந்தேன். உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக தான். 14 வருட திருமண வாழ்க்கையில் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தேன். என்னுடைய குழந்தைகளை கூட பார்க்க விட மறுக்கிறார்கள். அவங்களுக்கு நல்ல லைஃப் கிடைக்கணும் என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பாசத்தை பற்றி தவறாக பேசாதீர்கள். அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்று தெரிந்து தான் நான் ஓடி வந்தேன். எல்லாத்தையும் விட்டு தான் வந்தேன்.
ரவி பேட்டி:
இப்ப நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். நான் சம்பாதித்த எல்லாத்தையும் அவர்களுக்கு தான் கொடுத்து விட்டு வந்தேன். என்னுடைய பிள்ளைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து ஃபீஸ் கட்டினேன். அவர்களிடம் போன் பேச முடியவில்லை. ஸ்கூலுக்கு சென்று பார்க்க முடியவில்லை. பாடிகாட் கூடவே அனுப்பி வைக்கிறார்கள். அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறேன். உயிர் போகிற அளவுக்கு சுரண்டினால் என்ன செய்வேன்? சோசியல் மீடியாவில் ரொம்ப மோசமாக பேசி கெனிஷாவை அனுப்பி விட்டீர்கள். உங்களை நான் சும்மா விட போறதில்லை. நான் இதற்காக இங்கு பேச வரவில்லை. எனக்கு ரொம்பவே மனவேதனையில் இருந்தேன். என்னை புரிந்து கொண்டவர்களில் கெனிஷாவும் ஒருவர். அவர்களை பற்றி ரொம்ப மோசமாக சோசியல் மீடியாவில் பேசினார்கள்.
https://www.youtube.com/watch?v=MuztsOIx8HA
கொந்தளிக்கும் ரவி:
என்னுடைய வேலை அழகான பெண்களுடன் நடிப்பதுதான்? அவர்களுடைய அழகில் மயங்கி போயிட்டேனா? ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் கூட இப்படி நான் வந்திருப்பேனா? 45 வயசுல அழகு பின்னாடி ஓடுவேனா? ஓடுற வயசா? என்னுடைய பெயரில் ஒரு வங்கி கணக்கு கூட கிடையாது. ஒன்று மட்டும் தான் இருக்கு. அதுவும் ஜாயிண்ட் கணக்காக இருந்தது. என்ன செலவு பண்ணினாலுமே எதுக்கு? ஏன்? கேள்வி கேட்டு ரொம்ப கேவலமாக நடத்தினார்கள். நிறைய அநியாயம் நடந்திருக்கு. அதுக்கான ஆதாரமும் இருக்கு. கூடிய சீக்கிரத்திலேயே ஒவ்வொன்னா வெளியே விடுவேன். இவர்களுக்கு துணையாக நிறைய குழு வைத்திருக்கிறார்கள். அதுவும் பேர் சொல்ல விரும்பவில்லை. ஒரு மூன்று எழுத்து கொண்ட நடிகை, அதுவும் இட்லி நடிகை என்னை பற்றி ரொம்ப மோசமாக பேசினார்கள். என்னை பற்றி பேச அந்த நடிகைக்கு அருகதையே இல்லை என்றெல்லாம் கொந்தளித்து பேசி இருக்கிறார்.