தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்த ரவி மோகன் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 26/8/2025

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் காதலிக்க நேரமில்லை.

இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதை அடுத்து இவர் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ரவி திரைப்பயணம்:

இந்தப் படத்தை ‘Dawn Pictures and Red Gaint movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் ஜீனி என்ற படத்தில் நடிக்கிறார். அதோடு இன்னும் சில படங்களில் ரவி கமிட்டாகி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=Amzkjfn4V9c

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்:

தற்போது நடிகர் ரவி மோகன் அவர்கள் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதாவது, இன்று 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். சென்னையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உடைய தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியிருந்தார்கள்.

இயக்குனர் அவதாரம்:

மேலும், இதில் இவர் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கும் படத்தை தான் முதலாக தயாரிக்கிறார். இதை சில நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். இரண்டாவது படத்தை ரவி மோகன் இயக்குகிறார். அந்த படத்தில் யோகி பாபு தான் நடிக்கிறார். இந்த படத்திற்கு அன் ஆர்டினரி மேன் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு படங்களுக்குமான பூஜையுமே இந்த நிகழ்வில் போடப்பட்டது. பூஜைக்கு பிறகு நடிகர் யோகி பாபு, அவர் படம் இயக்குகிறார் என்ற விஷயத்தை நாங்கள் கோமாளி படம் பண்ணும் போது பேசியிருந்தோம்.

யோகிபாபு சொன்னது:

அப்பப்போ கதைகளை எல்லாம் பேசுவோம். அப்படித்தான் ரவி மோகன் சார், நான் படத்தை இயக்கினால் உன்னை வைத்து தான் பண்ணுவேன் என்றார். உடனே ரவி மோகன், எனக்கு இந்த நிகழ்வு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது என்று எனக்கு தான் தெரியும். யோகிபாபுவை ஹீரோவாக வைத்துதான் படம் பண்ணுவேன் என்று நான் ஆசைப்பட்டேன். இந்த மாதிரியான சந்தோஷமான நேரத்தில் என்னுடைய இரண்டு படங்களை இங்கு அறிவிக்கிறேன். நானும் இயக்குனர் ஆகிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full