என் வாழ்க்கையில் ஒளி கொண்டு வந்தவர், அழகான துணி - கெனிஷா உடனான உறவு பற்றி ரவி மோகன் சொன்னது
கெனிஷா உடனான உறவு குறித்து நடிகர் ரவி மோகன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இது தொடர்பாக ஆர்த்தி, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இருவருமே மேட்சிங் உடை அணிந்திருந்தார்கள். இது தான் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
ஆர்த்தி பதிவு:
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா, வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கிறது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும் அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும் என்று கூறியிருந்தார். இப்படி சர்ச்சைகள் வந்து இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் ரவி-கெனிஷா இருவருமே ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்று இருந்தார்கள். இதை அடுத்து ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து எமோஷனலாக பதிவு ஒன்று போட்டு இருந்தார்.
ரவிமோகன் அறிக்கை:
இதை எடுத்து ஆர்த்தி- ரவி விவகாரம் தொடர்பாக நிறைய சர்ச்சைகள் இணையத்தில் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் கெனிஷா உடனான உறவு குறித்து நடிகர் ரவி மோகன் கூறியிருப்பது, கெனிஷா பொருத்தவரை நீரில் மூழ்கும் ஒருவரை காப்பாற்ற வந்த தோழி. என்னை உடைத்துக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கையில் இருந்து விலக்கி வைத்து தைரியம் மட்டுமே கொடுத்தவர். எனக்கு உயிர்நாடியாக மாறினார். என்னுடைய பணம், வாகனம், ஆவணங்கள், என்னுடைய அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறும் காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேற்றும்போதும் கெனிஷா தான் எனக்காக நின்றார்.
கெனிஷா பற்றி சொன்னது:
சூழ்நிலை உணர்ந்து தயங்காமல் வந்த ஒரு அழகான துணை. கெனிஷா என் வாழ்க்கையில் ஒளி கொண்டு வந்தவர். நான் சட்டரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக அனைத்து போராட்டங்களையும் கெனிஷா நேராக பார்த்தார் கெனிஷா. அவர் புகழுக்காகவோ, பணத்திற்காகவோ இல்லாமல் வலிமையுடன் என்னுடன் இருக்க தீர்மானித்தார். நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு அவர் தான் நினைவூட்டினார். உங்கள் வாழ்க்கையிலும் ஒரு ஒளியை காண்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். கெனிஷா எனக்கும் என் பெற்றோருக்கும் என்னை தொடர்ந்து வழி நடத்திய என் குழுவினருக்கும் செய்த காரியம் ரொம்பவே மரியாதைக்குரிய ஒன்று.
அவருடைய நடத்தையையும் தொழிலையும் அவமதிக்கும் ஒரு சிறிய செயல்கள், கிண்டல்கள் எது வந்தாலுமே நான் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு தெரபிஸ்ட். அதை விட அவர் ஒரு அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையை சுருக்கமாக கேட்க நிமிடத்தில் எனக்கு தோழியாக மட்டுமே உதவுவேன் என்று தெரபிஸ்டாக உதவ மாட்டேன் என்று உறுதி அளித்தார். காரணம், அது சட்டத்திற்கு எதிரானது. மிரட்டி பணம் பறிப்பவர்களின் குடும்பத்துடன் துன்பப்பட்டதை என்னை விட வேறு யாரும் அதிகமாக புரிந்து கொள்ள முடியாது. கெனிஷாவுடன் சம்பந்தப்பட்டவர்களும் நியாயமே இல்லாதவாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், எனக்கு உண்மை தெரியும். என்னை அறிந்தவர்களுக்கும் என் நன்றி உணர்வு தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால் கெனிஷாவுக்கும் அதையே செய்வீர்கள் என நம்புகிறேன். என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியிருக்கிறார்.