சினிமாவில் நம்மை தூக்கிவிட யாரும் இல்லை, ஆனால் - மேடையில் கண்கலங்கிய நடிகர் ரிஷி ரித்விக்

By subhashini · 16/10/2025

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டாகி இருந்தது.

இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான தாராள பிரபு, ஓமணப்பெண்ணே போன்ற படங்களும் ஹிட் அடித்தது. சினிமாவில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆனாலும் சிறந்த கதைகளை ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுத்தது நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

டீசல் படம்:

இந்த படத்திற்கு சமீபத்தில் தான் மூன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து
தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டீசல். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அதுல்யா ரவி, ரிஷி ரித்விக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ரிஷி ரித்விக் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரிஷி ரித்விக், எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு சினிமாவில் பெரிதாக பேக்ரவுண்ட் எதுவும் இல்லை. ஆனால், எனக்கு கூட பிறந்த அண்ணனா சண்முகம் தான் சப்போர்ட் பண்ணி இருக்கார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=tKbWn8Xw0cE

சினிமா கேரியர் பற்றி சொன்னது:

எனக்கு பிடித்த மீனவர் கேரக்டரையே கொடுத்தார். படபிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்து கூடவே ஒரு தம்பி மாதிரி என்னை பார்த்துக் கொண்டார். இந்த சினிமாவில் நம்மை தூக்கி விடுவதற்கு யாரும் இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன். சண்முகம் அண்ணா இந்த படத்தில் வெற்றி பெறனும். 25 வருஷமா அண்ணன் போராடிக் கொண்டிருக்கிறார். அவருடைய கஷ்டத்தை என்னைக்குமே வெளியே சொல்ல மாட்டார். அவர் இந்த படத்தில் ஜெயித்து வெற்றி பெற்றால் பலருடைய குடும்பம் இங்கு வாழும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full