வெளிநாட்டவர் கூட கண்டுபிடிக்க முடியாதை கண்டுபிடித்து சாதித்த தமிழன் - எல்லாம் அவன் செயல் Rkவின் நீங்கள் அறிந்திராத பக்கம். (அட இந்த Product இவரது தானா)

By subhashini · 7/6/2022

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை புதுமுக நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் தான் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில படங்களில் நடித்தாலும் திரை உலகிலும், மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஆர்கே. 2008ஆம் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த திகில் திரைப்படம் எல்லாம் அவன் செயல். இந்த படத்தில் ஆர்கே, ஆஷிஷ் வித்யார்த்தி, ரகுவரன், ரோஜா செல்வமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். நடிகர் ஆர்கே இந்த படத்தின் மூலம் தான் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகியிருந்தார். மேலும், முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டும் இல்லாமல் அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் ஆர்கே நடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தா. அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து இருந்தார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் வெற்றிகரமான பிசினஸ்மேன் ஆவார். வழக்கமான ஒரு பிசினஸ்மேனாக இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களின் அடிப்படைப் பிரச்சினை தீர்க்க புது விதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பல தரப்பு சோதனைகளுக்குப் பிறகு அவற்றை மார்க்கெட்டில் சந்தைப்படுத்தி வெற்றிகரமான ஒரு கண்டுபிடிப்பாளராக வலம் வருகிறார். ஆனால், இவருடைய கண்டுபிடிப்புகளும் சாதனைகளுக்கும் வெளியே தெரிவதில்லை.

விஐபி ஹேர் கலர் ஷாம்பூ:

இது வருத்தத்திற்குரிய ஒன்று தான். இவரும் அதைப்பற்றி பெரிதாக பெருமைப்படுத்திக் கொள்பவரும் இல்லை. அந்த வகையில் இவர் கண்டுபிடிப்புகளில் ஒன்று கைகளில் ஒட்டாமல் நரைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு புதிய தீர்வாக இவர் கண்டுபிடித்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்ற புதிய தயாரிப்பு. இது உலகெங்கிலும் பிரபலமானது. அது மட்டும் இல்லாமல் பல்வேறு விதமான அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. குறிப்பாக இவரது இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசிய, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்கள் நடிகர் ஆர்கேவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆர்கே கிடைத்த அங்கீகாரம்:

அதுமட்டுமில்லாமல் மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான டத்தோ ஸ்ரீ பட்டமும் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற இந்த தயாரிப்பு கடந்த ஐந்து வருடங்களாக மார்க்கெட்டில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இவரது கண்டுபிடிப்பை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என நினைத்து பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். இருந்தாலும் இவர் அயராது ஓடிக்கொண்டிருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று 1005 பேரை இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்த செய்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் தன்னுடைய பொருளின் தரத்தையும் நிரூபித்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=6Y2wMez_kJM

ஆர்கே கண்டுபிடித்த தயாரிப்பு:

தற்போது அதற்கான அங்கிகாரம் தான் இவருக்கு அடுத்தடுத்து கிடைத்து வருகிறது. குறிப்பாக இதற்காக இந்திய அரசிடமிருந்து இருபது வருடங்களுக்கான காப்புரிமையையும் பெற்று இருக்கிறார் ஆர்கே. அதுமட்டும் இல்லாமல் இவர் தலைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு மட்டும் இல்லாமல் இன்றைய உலகத்தில் இன்னொரு தலையாய பிரச்சனையாக இருக்கும் குறட்டை பிரச்சினைக்கும் மருந்து கண்டுபிடித்திருக்கிறார். இதற்காக இவர் தான் கண்டுபிடித்த தயாரிப்பை கடந்த மூன்று வருடங்களாக மக்களிடத்தில் பயன்பாட்டிற்காக விட்டிருக்கிறார். எப்படி தனது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்திய அரசின் காப்புரிமை கிடைத்ததோ அதே போல் குறட்டை பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் தயாரிப்புகளுக்கு காப்புரிமை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆர்கே அளித்த பேட்டி:

அதோடு சினிமாவை விட்டு ஆர்கே ஒதுங்கி விட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஆர்கே அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்து கொண்டே தான் இருக்கும். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா காரணமாக சினிமா எந்த ஒரு அடியை எடுத்து வைக்க முடியாத சூழலில் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் என்னுடைய அடுத்தப் படத்திற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது.

தன் படம் குறித்து ஆர்கே சொன்னது:

விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப் போவதில்லை. என்னுடைய படம் எப்பொழுதும் தியேட்டர்களில் வெளியாகும். திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக படம் எடுப்பவன் நான். RRR , கே ஜி எஃப் 2 போன்ற படங்களின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் தான் என்னுடைய படங்களும் உருவாகின்றன. அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி இருந்தார். ஒரு பக்கம் வியாபாரம், இன்னொரு பக்கம் சினிமா என்று இருந்தாலும் இதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை ஏழை மக்களின் உதவிக்காக தனியாக ஒதுக்கி வைக்கிறார் நடிகர் ஆர்கே என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full