தன் குடும்பத்தோடு இப்படி ஒரு மதத்திற்கு மாறிய பிரபல வில்லன் சாய் தீனா.

By subhashini · 9/11/2022

தன் குடும்பத்துடன் புத்த மதத்திற்கு நடிகர் சாய் தீனா மாறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் தீனா. இவர் விளம்பரப் பலகை கலைஞராகத்தான் மீடியாவிற்கு நுழைந்தார். அதற்குப்பின் இவர் அடியாள் வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் கமலஹாசனின் 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படத்தில் சிறைவார்டானாக நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லனாக தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கிறார்.

சாய் தீனா திரைப்பயணம்:

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த எதற்கும் துணி துணிந்தவன் படத்தில் தீனா நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, வினய், துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.

தீனா நடித்த படங்கள்:

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், இவருடைய நடிப்பை தாண்டி இவருடைய பேச்சுக்கும் பல பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

தீனா குறித்த தகவல்:

இவர் எப்போதும் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணம் உடையவர். கொரோனா பாதிப்பில் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு இவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். படத்தில் தான் இவர் வில்லனே தவிர நிஜத்தில் இவர் உண்மையான ஹீரோ என்று சொல்லலாம். சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இந்த நிலையில் நடிகர் சாய் தீனா குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

மதம் மாறிய நடிகர் தீனா:

அதாவது, இவர் தன்னுடைய குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். புத்த துறவி மௌரிய முன்னிலையில் புத்த மதத்தை தழுவதற்காக 22 உறுதிமொழிகளை நடிகர் தீனா ஏற்றுக்கொண்டு புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். தற்போது அவர் குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறிய புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full