இவர்களுக்கு பதில் இவர், சித்து - ஸ்ரேயா சீரியலில் நடந்த மாற்றம். காரணம் என்ன?

By ·

சித்து - ஸ்ரேயா நடிக்கும் வேலன் சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் விலகிய காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்தவர்கள் சித்து- ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘திருமணம்’ என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அதே தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.

அதோட சோசியல் மீடியாவில் இவர்களுடைய ஜோடி புகைப்படங்கள் தான் அதிகமாக வைரல் ஆகி இருந்தது. அதற்குப் பிறகுதான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். மேலும், நடிகர் சித்து ‘திருமணம்’ சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்திருந்தார். அதே போல் நடிகை ஸ்ரேயாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்புடன் குஷி’ என்னும் சீரியலில் நடித்திருந்தார்.

சித்து- ஸ்ரேயா திரைப்பயணம்:

அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ரஜினி' என்னும் சீரியலிலும் ஸ்ரேயா நடித்திருந்தார். இவர்கள் நடித்த அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளியின் வேலன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாக துணையாக நிற்கும் வேலனின் கதை தான் இந்த வள்ளியின் வேலன். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்து வந்தவர் சாக்ஷி சிவா.

வள்ளியின் வேலன்:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து சாக்ஷி சிவா வெளியேறி இருக்கிறார். இவருக்கு பதிலாக ஆடிட்டர் ஸ்ரீதர் கமிட் ஆகிறார். இது பலருக்குமே ஷாக் தான். இதுகுறித்து சேனல் தரப்பில் கூறியிருப்பது, சீரியல் தொடங்கிய சில மாதங்கள் தான் ஆகிறது. ஆரம்பத்திலிருந்து அவருக்கும் தயாரிப்பு மற்றும் சேனல் தரப்புடன் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருந்தது. இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் கூட சண்டை எல்லாம் வந்திருக்கிறது. சில நேரங்களில் ஷூட்டிங்கெல்லாம் கூட பாதிக்கப்பட்டு இருக்கு. இந்த சண்டையால் மற்ற நடிகர்களும் சில பிரச்சனைகளை சந்தித்து இருந்தார்கள்.

சீரியலில் விலகிய முக்கிய நடிகை:

நாங்களும் பிரச்சனை பேசி சரி செய்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், அது நாளுக்கு நாள் அதிகமானதே தவிர தீர்ந்த பாடியில்லை. கடைசியில் இந்த தொடரில் இருந்து சாக்ஷி சிவா வெளியேறி விட்டார் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம், இவர் நடிக்கிற எல்லா சீரியலிலும் குறிப்பிட்ட ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் தனக்காக டப்பிங் பேச அனுமதிப்பார். இதனால் இவருடைய தரப்பிலிருந்து சில விஷயங்களை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பார். அந்த வாய்ஸ் தான் தனக்கு சரியாக இருக்கும் என்று இவர் உறுதியாக நம்புகிறார். இந்த சீரியல் கமிட்டான போது அந்த ஆர்டிஸ்ட் உடைய டப்பிங் பேச அனுமதிக்கணும் என்று கேட்டிருக்கிறார்.

விலக காரணம்:

சேனல் தரப்பிலும் சம்மதம் சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தான் இவருக்கும் தயாரிப்பு தரப்புக்குமே பிரச்சினை வந்தது. இவருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கு பேசிய சம்பளம் கிடைக்கவில்லை என்று இவர் தரப்பில் அதிருப்தி அடைந்து கேட்டார். ஆனால், பட்ஜெட்டை காரணம் காட்டி ஒரு கட்டத்தில் அந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மாற்றி விட்டார்கள். இந்த சண்டை நாளுக்கு நாள் பெரிதானதும் கடைசியில் அவர் வெளியேற முடிவுக்கு வந்தார். பின் தயாரிப்பு தரப்புமே இவருக்கு பதில் வேறொரு ஆர்டிஸ்ட்டை தேட முடிவு செய்து, ஆடிட்டர் ஸ்ரீதர் கமிட் ஆகி இருக்கிறார். இவர் ஒருவரால் மட்டும் சூட்டிங் பாதிக்கப்பட்டு தேவையில்லாமல் மத்த நபர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் இந்த மாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full