புத்தாண்டு நாள் அன்னிக்கு நடிகர் சந்தானம் எங்க போனாரு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.

By subhashini · 2/1/2020

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் அவர்கள் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார். இதற்கு பிறகு இவர் சினிமா உலகில் ‘மன்மதன்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். மேலும், அவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் வேற லெவல். காமெடியனாக திரையுலகில் கால் பதித்த சந்தானம் அவர்கள் தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

சினிமாவில் தனக்கென்று ஒரு காலம் வந்து விட்டால் அனைவரும் பட்டையை கிளப்புவார்கள். அப்படி தான் சினிமா உலகில் தனக்கென பாதையை அமைத்துக் கொண்டவர் நடிகர் சந்தானம். காமெடியனாக பெரிய அளவில் புகழ் பெற்ற இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இதனால் தான் சந்தானத்தை படங்களில் அடிக்கடி பார்க்க முடியவில்லை. இந்நிலையில் நடிகர் சந்தானம் அவர்கள் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒரு இடத்திற்கு சென்று உள்ளார். அது வேறு எங்கேயும் இல்லைங்க, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறப்பு தரிசனம் செய்ய அவர் சென்று உள்ளார்.

புத்தாண்டு பிறந்த நாளில் இருந்து தன்னுடைய திரைப்படத் துறையில் தனது நிலையான இடத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு செய்தார் நடிகர் சந்தானம். தற்போது இவர் புதிதாக நடித்து வரும் டகால்டி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும், இந்த புத்தாண்டு முதல் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தன் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சந்தானம் மீனாட்சி அம்மன் கோயிலில் வேண்டுதல் செய்ய வந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது அவர் கூறியது, மீனாட்சி அம்மன் கோயில் சிறப்பு பற்றி புதுசா நான் என்ன சொல்லுறது ?அனைவருக்கும் தெரியும் மீனாட்சி அம்மனின் சிறப்புகள். இப்போது மட்டுமல்ல நான் வருடம் வருடம் மீனாட்சி அம்மனை வழிப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். மேலும், அவர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ள போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சந்தானம் அவர்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறார். இது புது படத்திற்கான கெட்டப்பில் சந்தானம் உடல் எடையை குறைத்துக் கொண்டு இருக்கிறாரோ? என்றும் கூறுகிறார்கள்.

அதோடு இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் இவருடைய விடா முயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது. பின்னர் சந்தானத்தின் மார்க்கெட் வேற லெவல் உயர்ந்தது என்றும் சொல்லலாம்.

தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு இவர்கள் இருவரும் இணைந்து டகால்டி என்ற திரைப் படத்தில் நடித்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து டகால்டி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படம் ஆக்ஷன்,காமெடி, காதல் என எல்லாம் கலந்த கலவையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை ரித்திகா சென் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full