மச்சா உள்ளே வந்துடாதன்னு சொல்லாதீங்க - 'கண்ணப்பா' பட விழாவில் நடிகர் சரத்குமார் ஆவேசம்
தெலுங்கு மொழியில் பிரபல நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கண்ணப்பா. இந்த படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால் உட்பட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் என பல மொழிகளில் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய சரத்குமார் கண்ணப்பா ஒரு வரி கதைதான். 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் சிவ பக்தர்களில் ரொம்பவே சிறப்பு வாய்ந்தவர். இது அனைவருக்கும் தெரியும். இதை விஷ்ணுவின் கோணம் என்று தான் சொல்ல வேண்டும். நம்பிக்கை அற்றவர் பிறகு நம்பிக்கை உள்ளவராக மாறுகிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி தீவிர சிவ பக்தராக மாறுகிறார். அவருக்கான போராட்டம் என்ன என்பது தான் இந்த படத்தினுடைய மையக்கரு.
கண்ணப்பா படம்:
மோகன் பாபு சாருக்கும் விஷ்ணு மஞ்சுவுக்கும் நான் தொடர்ந்து வாழ்த்து சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன். இதற்கு காரணம், படத்தினுடைய லொகேஷன் சிறப்பாக இருந்தது. இயற்கையின் சொர்க்கம் என்றால் அது நியூசிலாந்த்தான். அங்கு இருப்பது நிஜமான வண்ணம். டிஐயில் பண்ணாத ஒரிஜினல் வண்ணம் என்று தைரியமாக சொல்லலாம். பொதுவாக அந்த இடத்தில் பத்திலிருந்து 20 நாட்கள் படபிடிப்பு நடத்தலாம். ஆனால், 120 நாட்கள் படப்பிடிப்பு வெளிநாட்டில் எடுப்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. அதற்கான உழைப்பு ரொம்பவே அதிகம். அந்த காலத்தில் இந்த பூமி இப்படித்தான் இருந்திருக்கும் என்று தான் அந்த இடத்தை தேர்வு செய்தார்கள்.
https://www.youtube.com/watch?v=KVwWenD9jT8
விழாவில் சரத்குமார்:
குளிர் அதிகமாக இருந்தாலும் வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறோம். நான் படத்தில் தின்னாவின் அப்பாவாக நடித்திருக்கிறேன். அதோடு நான் பலமுறை மோகன் பாபு சாருடன் படம் பண்ணுவதாக இருந்து பண்ண முடியாமல் போனது. ஆனால், இந்த படத்தில் அது நடந்தது. ரொம்ப மகிழ்ச்சி. இப்போது இருக்கும் தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளை சொல்ல மறந்திருக்கிறோம். பொன்னியின் செல்வன் கதை பெரியவர்களுக்கு தெரியும். ஆனால், இளைய தலைமுறைகளுக்கு தெரியாது. அதை தான் மணி சார் படமாக கொடுத்தார்.
படம் பற்றி சொன்னது:
அதேபோல்தான் கண்ணப்பன் கதையுமே இளைய தலைமுறைகளுக்கு தெரிய வேண்டும் என்று எடுக்கப்பட்டிருக்கிறது. கடவுள் இருக்கிறார். கடவுள் இயேசுவாக இருக்கலாம், அல்லாஹ்வாக இருக்கலாம், தமிழ் கடவுளாக இருக்கலாம் என்பதை சொல்ல வேண்டும். இப்போது இருக்கும் ஓட்டத்தில் கடவுளையும் பக்தியையும் மறந்து விடுகிறார்கள். அதனால் தான் கலை மூலமாகவும் திரைப்படம் மூலமாகவும் பக்தியை மக்களிடம் பற்றி சொல்ல வேண்டியது ரொம்ப முக்கியமான ஒன்று.
ரசிகர்களுக்கு கோரிக்கை:
அந்த வகையில் கண்ணப்பன் படத்தை பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு சிவ பக்தர் இருந்தாரா ?என்று மக்கள் அறிந்து கொள்வார்கள். அதேபோல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். உங்கள் பார்வையில் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு 'மச்சான் உள்ளே வந்துடாதே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும். உங்கள் நண்பர்களுக்கு வேரு ஒரு கருத்து இருக்கும். சிலர் பிரபாஸுக்காக இந்த படம் பார்க்க வரலாம். அவர் அவர் பார்வையில் படத்தை பாருங்கள். அதை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.