இனி கொடுமைகளை பொறுத்து கொள்ள முடியாது - சரவணன் முதல் மனைவி கொடுத்த புகார்
சரவணன் மீது முதல் மனைவி கொடுத்த புகார்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரவணன். இவர் வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதற்குப்பின் வாய்ப்புகள் குறைந்த உடன் குணசித்திர வேடங்களில் சரவணன் நடித்து வந்தார். பின் இடையில் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார்.
பின் இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் மிரட்டிக்கொண்டு வருகிறார். இதற்கிடையில் நடிகர் சரவணன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு சூர்ய ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை. இதனால் சரவணன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
சரவணன் குறித்த தகவல்:
பின் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் மனைவி தனியாகவும், இரண்டாவது மனைவியுடன் சரவணன் வசித்து வந்தார். பின் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக சரவணன் அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். முதல் மனைவியுடன் சரவணன் பேசிக்கொள்ளவில்லை. அதற்குப் பின் தன்னுடைய கணவர் சரவணன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசுவதாகவும் ஏற்கனவே ஆவடி காவல் ஆணையத்தில் சூர்ய ஸ்ரீ புகார் அளித்திருந்தார்.
சூர்ய ஸ்ரீ புகார்:
அதை அடுத்து தனக்கு சாப்பிட உணவு கூட தருவதில்லை என்று நீதிமன்றத்தில் ஜீவானம்சம் கேட்டு சூர்ய ஸ்ரீ வழக்கு தொடர்ந்தார். அதன் பின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ கேட்ட ஜீவானம்சம் வழங்க வேண்டும் என்று கடந்து இரண்டாம் தேதி நீதிமன்றம் சரவணனுக்கு உத்தரவிட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் நடிகர் சரவணன் மீது சூர்ய ஸ்ரீ அளித்திருக்கும் புகார் தான் தற்போது நேரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர், தான் தங்கி இருந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை சரவணன் வைத்த ஆட்கள் அகற்றி இருக்கிறார்கள். இதனால் என்னுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை.
சரவணன் மீது புகார்:
ஏற்கனவே பல்வேறு தாக்குதல்கள் என் மீது நடத்தப்பட்டு இருக்கிறது. இப்போ கேமராவும் அகற்றப்பட்டிருப்பதால் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனக்கும் என்னுடைய உடமைக்கும் எது நேர்ந்தாலும் அதற்கு நடிகர் சரவணன் தான் முழுக்க காரணம். முதல் மனைவியிடம் சட்டப்படி முறையாக விவாகரத்து பெறாமல் அவர் என்னை தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் .இதை அடுத்து இரு தரப்பிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.